Connect with us

பொழுதுபோக்கு

1948-ல் தொடங்கி 1954-ல் ரிலீஸ்; 6 வருஷம் நடந்த ஷூட்டிங், நடிகைக்கு சம்பளம் 4 லட்சம்: எந்த படம் தெரியுமா?

Published

on

Screenshot 2025-09-02 134801

Loading

1948-ல் தொடங்கி 1954-ல் ரிலீஸ்; 6 வருஷம் நடந்த ஷூட்டிங், நடிகைக்கு சம்பளம் 4 லட்சம்: எந்த படம் தெரியுமா?

இன்றைய தமிழ் சினிமாவில் உச்ச பட்ச சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் 1934 ஆம் ஆண்டிலேயே  9 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கினார் ஒரு நடிகை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அவர்தான் கே. பி. சுந்தராம்பாள். கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்பதே இவரது முழு பெயர்.தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரான இவர், தான் நடித்த திரைப்படமான பக்தி நந்தனார் என்ற திரைப்படத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாராம். அன்றைய காலகட்டத்தில் அவர் வாங்கிய ஒரு லட்சம் என்பது இன்று 9 கோடி முதல் 25 கோடி வரை மதிப்புடையதாக சொல்லப்படுகிறது. 1939 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் பேசும் படம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வந்த திரைப்படம் தான் பக்த நந்தனார். இந்தப் படத்தில் கே பி சுந்தராம்பாள் நந்தனராக ஆண் வேடமிட்டு நடித்தார். கிட்டத்தட்ட 41 பாடல்கள் இடம் பெற்ற இத்திரைப்படத்தில் 19 பாடல்களை இவரே பாடியிருப்பார்.தன்னுடைய சிறு வயதில் பசியின் காரணமாக கோவில்களில் அமர்ந்திருந்த கே.பி சுந்தராம்பாள் அங்கு பாடப்படும் பாடல்களை கேட்டு பெற்ற கேள்வி ஞானத்தால் 8 வயதிலேயே பாடல்களை பாட ஆரம்பித்தார். ரயில் நிலையங்களில் பாடல்களை பாடி கொண்டிருந்தவர் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி நாடகங்களில் நடிக்க தொடங்கினார். தனித்துவமான குரல் வளத்தால் காண்போரை வியக்க வைக்கும் இவர், நல்லதங்காள், வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற பல்வேறு நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் நடித்த மணிமேகலை என்ற திரைப்படத்தில் மணிமேகலை என்னும் துறவி வேடத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்திலும் கிட்டத்தட்ட 11 பாடல்களை  இவரே  பாடினார்.கே பி சுந்தராம்பாளை  பக்தர்களிடம் மிகவும் நெருக்கமாக கொண்டு சென்றது திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற “பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா” என்ற பாடல் தான். சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய இப் பாடலை  மிகவும் உயிர்ப்போடு பாடி இருப்பார் சுந்தராம்பாள். காரைக்கால் அம்மையார் என்ற படத்தில் “தக தகவென ஆடவா” என்ற பாடலும் இன்று வரை ரசிகர்களால் மிகவும் விரும்பப்படக்கூடிய ஒரு பக்தி பாடல்.அவ்வையாராக இவர் நடித்த அந்த படத்தை எஸ் எஸ் வாசன் அவர்கள் 6 வருடங்கள் சுட செய்தாராம். அப்படிப்பட்ட அவருடைய வீடு இன்று சாப்ட்வேர் கம்பெனியாக மாறியுள்ளது என்று ஒரு நேர்காணலில் சிவகுமார் அவர்கள் பேசியுள்ளார். “போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு செல்ல மாட்டோம் அதனால் இருக்கும் வரை நம்மால் முடிந்த வரை செய்ய வேண்டும்.” என்று கூறினார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன