சினிமா
OG திரைப்பட லுக்கில் மாஸ் காட்டும் பவன் கல்யாண்.! பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் போஸ்டர்!
OG திரைப்பட லுக்கில் மாஸ் காட்டும் பவன் கல்யாண்.! பிறந்தநாளை முன்னிட்டு வைரலாகும் போஸ்டர்!
தெலுங்கு சினிமாவின் சூப்பர் Star என அழைக்கப்படும் நடிகர் பவன் கல்யாண் இன்று (செப்டெம்பர் 2, 2025) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா உலகமும் இதனைக் கொண்டாடி வருகின்றது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில், OG திரைப்படக் குழு அவருக்கு ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் இணையத்தில் வைரலாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.OG திரைப்படம் பவன் கல்யாண் நடித்து வரும் மிகுந்த எதிர்பார்ப்புகள் கொண்ட பான் இந்தியா படம் ஆகும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இது வெளியாக இருக்கிறது. இப்படத்தை இயக்குவது சுஜித் ஆகும். பவன் கல்யாணின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட புதிய போஸ்டரில், அவர் பூரணமாக மாஸ் லுக்-இல் தோன்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
