இலங்கை
ஊழல் குற்றச்சாட்டு; 7 மாதங்களில் 49 பேர் கைது!
ஊழல் குற்றச்சாட்டு; 7 மாதங்களில் 49 பேர் கைது!
2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளுக்காக மொத்தம் 49 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 3 ஆயிரத்து 937 முறைப்பாடுகள் கிடைத்தன என்றும், அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 72 சோதனை நடவடிக்கைகளில் 39 சோதனை நட வடிக்கைகள் வெற்றியளித்துள்ளன என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
