இலங்கை
கச்சத்தீவை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் – அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!
கச்சத்தீவை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் – அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!
கச்சத்தீவு இலங்கைக்குரியது, அதனை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தென்னிந்திய அரசியல்வாதிகள் அரசியல் இலாபத்திற்காக ஒரு சில கருத்துக்களை வெளியிடமுடியும். அதில் ஒன்றுதான் கச்சத்தீவு தொடர்பான கருத்துக்கள்.
கச்சத்தீவு இலங்கைக்குரியது. அதனை நாம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டு வாக்காளர்களை உற்சாகப்படுத்த அவர்கள் கூறும் கதைகளுக்கு நாம் குழம்பிக்கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
