இலங்கை
தடையை நீக்க ஐ.தே.க. முடிவு!
தடையை நீக்க ஐ.தே.க. முடிவு!
ஐக்கிய தேசியக் கட்சியால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்சித் தடையை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுகுக்கும் அழைப்பு விடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நிகழ்வில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.
