இலங்கை
போர் முடிவுக்கு கச்சதீவுக்குச் செல்கிறார் அநுர
போர் முடிவுக்கு கச்சதீவுக்குச் செல்கிறார் அநுர
படையினருக்காகக் குரல்கொடுப்பது அவசியம்; நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவிப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவந்ததால் தான் ஜனாதிபதி இன்று சுதந்திரமாக கச்சத்தீவுக்குச் செல்கின்றார். எனவே, படையினருக்காக ஜே.வி.பி.யும் குரல் கொடுக்க வேண்டும் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
படையினருக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்கவேண்டும். ஏனெனில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் தான் ஜே.வி.பி. உட்பட அனைத்து கட்சிகளாலும் அரசியல் செய்ய முடிகின்றது. ஜனாதிபதியால் இன்று சுதந்திரமாக கச்சத்தீவுக்குச் செல்ல முடிகின்றது. போர் முடிவுக்கு வந்திருக்கா விட்டால், கச்சதீவுக்குச் செல்வதற்கு பிரபாகரனின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமையே இருந்திருக்கும். கடற்படையினர் தான் கச்சத்தீவைப் பாதுகாக்கின்றனர். கடற்படையின் படகிலேயே ஜனாதிபதி கச்சத்தீவுக்குச் சென்றார். ஜனாதிபதி அங்கு சென்றது மகிழ்ச்சி. ஜனாதிபதி சுதந்திரமாகச் செல்வதற்குரிய சூழ்நிலையை படையினரே ஏற்படுத்திக்கொடுத்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. ஆனால் முன்னாள் கடற்படைத் தளபதி சிறையில் உள்ளார் – என்றார்.
