இலங்கை
மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் பலி!
மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் பலி!
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று (2) இடம்பெற்றுள்ளது.
களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 26 வயதுடைய சந்தரலிங்கம் சுரேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதியே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவம் இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அதையடுத்து மருத்துவமனைக்குச் சென்று பிரேதத்தைப் பார்வையிட்ட பின்னர் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
