இலங்கை
முல்லைத்தீவில் முன்னாள் போராளி சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் முன்னாள் போராளி சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான மகேந்தி நேற்றையதினம் (2) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மகேந்தி என அழைக்கப்படும் இராமப்பிள்ளை கமலராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு முன் பகுதியில் உள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூத்த போராளியான மகேந்தி , இந்திய பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றதுடன் பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தாராவர்.
இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
