விளையாட்டு
பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை… பாட்னா பைரேட்ஸ் வீரர்களுக்கு குவியும் பாராட்டு
பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை… பாட்னா பைரேட்ஸ் வீரர்களுக்கு குவியும் பாராட்டு
12 அணிகள் அணிகள் ஆடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற ஆகஸ்ட் 29 முதல் தொடங்கி நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் விசாகப்பட்டினத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில் யு மும்பா – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – உபி யோதாஸ் மோத உள்ளன. இந்நிலையில், புரோ கபடி லீக் தொடரில் களமாடி வரும் பாட்னா பைரேட்ஸ் அணியின் வீரர்கள் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த சீசனில் போட்டிகள் நடைபெறும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை பாட்னா பைரேட்ஸ் அணியினர் செய்து வருகிறார்கள். அந்த வகையில், நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள நேத்ரா வித்யாலயாவிற்கு சென்றுள்ளனர். இந்த நேத்ரா வித்யாலயா 2001 முதல் பார்வையற்ற குழந்தைகளை தன்னம்பிக்கை கொள்ள தரமான கல்வியை வழங்கி வருகிறது. இந்நிலையில், பாட்னா பைரேட்ஸ் அணியின் அங்கித் ஜக்லான், அயன் லோசாப், மணிந்தர் சிங் மற்றும் தீபக் ரதி ஆகிய வீரர்கள் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் தங்களது நேரத்தை செலவிட்டனர். தொடர்ந்து, பள்ளியில் உள்ள 115 குழந்தைகளுக்கும் பாட்னா பைரேட்ஸ் ஏற்பாடு செய்த இரவு உணவை அங்கித், அயன், மணிந்தர் மற்றும் தீபக் ஆகிய வீரர்கள் பரிமாறி மகிழ்ந்தனர்.தொடர்ந்து, பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நிலைத்தன்மையை விரிவுபடுத்தும் முயற்சியாக, பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் அங்கித் ஜக்லான் நேத்ரா வித்யாலயா அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கினார். இதேபோல், அயன் லோச்சாப் 21,000 ரூபாயை நன்கொடையாக வழங்கினார். இதன்பின்னர், பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் அங்கித் ஜக்லான் பேசுகையில், “நேத்ரா வித்யாலயா மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளில் உள்ள குழந்தைகளுடன் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்.மீதமுள்ள இடத்தை வலுவான முறையில் முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருந்த குழந்தைகளிடமிருந்து நாங்கள் உத்வேகம் பெற்றோம். சுயசார்பு மீதான அர்ப்பணிப்பு, ஒரு அணியாகவும், ஒரு பெரிய சமூகத்தின் ஒரு பகுதியாகவும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது” என்று அவர் கூறினார். நான்காவது சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான தேடலில் இருக்கும் பாட்னா அணி ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லியில் இதுபோன்று தங்களால் இயன்ற உதவியை வழங்கிட இருக்கிறது. ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை இரவு 8:00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து, இரவு 9 மணிக்கு அரங்கேறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மல்லுக்கட்டும்.
