இந்தியா
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்திய 5 பேர் கைது; 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்திய 5 பேர் கைது; 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் உத்தரவின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் தலைமையில் பில்லூர் ஏரிக்கரை அருகே வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்த போலீசார், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி (25) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து புதுச்சேரி மதுபானங்கள் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். அதேபோன்று, விழுப்புரம் காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வாகன தணிக்கை செய்த போது அவ்வழியாக வந்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்த நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த முருகன் (38), பானுமதி (32), ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் புதுச்சேரி மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராபர்ட் மற்றும் காவலர்கள் தலைமையில் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனதை நிறுத்தி சோதனை மேற்க்கொண்டனர். அதில், புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து கோபால் (18), தனலட்சுமி (22) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – விழுப்புரம்
