தொழில்நுட்பம்
இன்றிரவு ரத்த நிறத்தில் ஜொலிக்கும் நிலா: வீட்டிலிருந்தே கண்டுரசிக்க வாய்ப்பு! லைவ்வில் பார்ப்பது எப்படி?
இன்றிரவு ரத்த நிறத்தில் ஜொலிக்கும் நிலா: வீட்டிலிருந்தே கண்டுரசிக்க வாய்ப்பு! லைவ்வில் பார்ப்பது எப்படி?
செப்டம்பர் 7, 8 தேதிகளில் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் முழு சந்திர கிரகணத்தைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வானியல் நிகழ்வின்போது சந்திரன் ரத்தம் போன்ற சிவப்பு நிறத்தில் தோன்றும். ஆசியா, மேற்கு ஆஸ்திரேலியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள வானியல் ஆர்வலர்களால் இந்த சிவப்பு ‘இரத்தச் சந்திரனை’ காண முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கசெப்.7 அன்று, இந்திய நேரப்படி இரவு 2:41 மணிக்கு (அமெரிக்க நேரப்படி மாலை 5:11 மணி) சந்திர கிரகணம் அதன் உச்சக்கட்டத்தை அடையும். அதாவது, சந்திரன் முழுமையாக பூமியின் கருநிழலில் மூழ்கிவிடும். சந்திரன் முழுமையாக கருநிழலில் மூழ்கும் இந்த நிலைக்கு totality என்று பெயர். இந்த நிலை 82 நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நேர மண்டலங்களுக்கு ஏற்ப பார்வை நேரம்இந்த முழுமை நிலையை பல்வேறு நேர மண்டலங்களில் காண முடியும். உலகின் சுமார் 77% மக்கள் கிரகணத்தின் முழு நிலையைப் பார்க்க முடியும் என கூறப்படுகிறது. லண்டன் (BST): இரவு 7:30 முதல் 7:52 மணி வரை, பாரிஸ் (CEST) மற்றும் கேப் டவுன் (SAST): இரவு 7:30 முதல் 8:52 மணி வரை, இஸ்தான்புல், கெய்ரோ, மற்றும் நைரோபி (EEST/EAT): இரவு 8:30 முதல் 9:52 மணி வரை, தெஹ்ரான் (IRST) இரவு 9 முதல் 10:22 மணி வரை.இந்தியாவில் பார்வை நேரம்மும்பை (IST): இரவு 11:00 முதல் நள்ளிரவு 12:22 மணி வரைபாங்காக் (ICT): நள்ளிரவு 12:30 முதல் 1:52 மணி வரைபெய்ஜிங் (CST), ஹாங்காங் (HKT), மற்றும் பெர்த் (AWST): அதிகாலை 1:30 முதல் 2:52 மணி வரைடோக்கியோ (JST): அதிகாலை 2:30 முதல் 3:52 மணி வரைசிட்னி (AEST): அதிகாலை 3:30 முதல் 4:52 மணி வரைசந்திர கிரகணத்தின்போது என்ன நடக்கும்?சந்திரன் பூமியின் புறநிழலில் நுழைவதோடு கிரகணம் தொடங்குகிறது. சந்திரன் மேலும் நகர்ந்து கருநிழலுக்குள் செல்லும்போது, அதன் மேற்பரப்பில் இருண்ட நிழல் படரும். முழுமைநிலை ஏற்படும்போது, சந்திரன் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் தோன்றும். இந்நிறம், கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தில் நிலவும் சூழ்நிலைகளைப் பொறுத்தது.சந்திரனின் தோற்றம்செப்.7-8 அன்று நிகழும் சந்திர கிரகணம், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளிக்கு 2.7 நாட்களுக்கு முன்பு நிகழ்கிறது. இதனால், சந்திரன் வழக்கமான அளவை விட சற்றே பெரியதாகத் தோன்றும். இது பூமியின் கருநிழல் வழியாக நகரும்போது, செழுமையான மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் ஒளிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு இந்த நிகழ்வு சிறந்த அனுபவமாக இருக்கும். ஏனெனில், முழுமைநிலையின்போது சந்திரன் தலைக்கு மேலே உயரமாக இருக்கும். இது சாதாரண பார்வை மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்றதாக இருக்கும். அதே சமயம், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் கிரகணம் நிலவு உதயமாகும்போது தெரியும் என்பதால், அது ஒரு திகைப்பூட்டும் அடிவான காட்சியைக் கொடுக்கும்.முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. சூரிய கிரகணத்தைப் போல், இதற்கு பிரத்யேக கண்ணாடி, லென்ஸ் அல்லது வேறு எந்த உபகரணங்களும் தேவையில்லை. முழுமைநிலையில் சந்திரனின் சிவப்பு நிறம் பூமியின் வளிமண்டலத்தில் சூரிய ஒளி சிதறுவதால் ஏற்படுவதால், அதை வெறும் கண்ணால் தெளிவாகக் காணலாம். பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி மூலம் மேலும் பல விவரங்களைப் பார்க்கலாம், ஆனால் அவை அவசியம் இல்லை.
