தொழில்நுட்பம்
ஏ.ஐ. அம்சங்களுடன் ஐபோன் 17 சீரிஸ் இன்று அறிமுகம்! என்னென்ன புதிய அம்சங்கள்?
ஏ.ஐ. அம்சங்களுடன் ஐபோன் 17 சீரிஸ் இன்று அறிமுகம்! என்னென்ன புதிய அம்சங்கள்?
உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இன்று நடைபெறும் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர “Awe-dropping” நிகழ்வு இந்திய நேரப்படி இன்றிரவு 10:30 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்நிகழ்வில், ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த இந்த மாடல்கள், இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளன.புதிய சீரிஸில் 4 மாடல்கள்!இந்த முறை ஐபோன் லைன்அப்பில் பெரிய மாற்றம் இருக்கலாம். ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என 4 புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படலாம். கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 16 மாடல்களும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.ஐபோன் 17 vs ஐபோன் 17 ஏர்: முக்கிய வேறுபாடுகள்வடிவமைப்பு: ஐபோன் 17 ஏர், இதுவரை வெளியான ஐபோன்களில் மிக மெல்லியதாக இருக்கும். இதன் தடிமன் சுமார் 5.5 மி.மீ. மட்டுமே. ஐபோன் 17 வழக்கமான வடிவமைப்பில் வரும்.டிஸ்ப்ளே: ஐபோன் 17-ல் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய OLED திரை இருக்கும். ஆனால், ஐபோன் 17 ஏர் மாடலில், மெல்லிய வடிவமைப்பிற்காக, 60Hz புதுப்பிப்பு வீதமே இருக்கும்.கேமரா: ஐபோன் 17 மாடல் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால், ஐபோன் 17 ஏர் மாடலில் ஒரே ஒரு கேமரா மட்டுமே இருக்கும்.என்னென்ன புதிய அம்சங்கள்?புதிய மாடல்களில் ஏ19 பயோனிக் சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் ஹெல்த் டிராக்கிங் வசதிகள் போன்ற பல புதிய அம்சங்கள் இடம்பெறலாம். ஐபோன் மட்டுமின்றி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, வாட்ச் அல்ட்ரா 3 மற்றும் வாட்ச் எஸ்இ 3 ஆகிய மாடல்களும், 3-ம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோவும் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஐபோன் 17 மாடல் விலை ரூ.89,900ஆக இருக்கலாம். புதிய மாடலான ஐபோன் 17 ஏர் ரூ.95,000ஆகவும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ரூ.1,64,900ஆகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.நிகழ்வை எங்கே பார்க்கலாம்?ஆப்பிளின் இந்த பிரம்மாண்ட நிகழ்வை இன்றிரவு 10:30 மணிக்கு ஆப்பிளின் யூடியூப் சேனல் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் நேரலையில் காணலாம். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஐபோன் 16 மாடலின் விலை குறைய வாய்ப்புள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
