இந்தியா
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக நேற்று தெரிவான சி.பி.இராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்க உள்ளார்.
இந்தியாவின் 16ஆவது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி பதவி விலகினார். வெற்றிடமான அந்தப் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியக் கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கமைய, இந்தியாவின் 17 ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி.இராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
