தொழில்நுட்பம்
Apple Event 2025: ஐபோன் ஏர், ஏர்பாட்ஸ் ப்ரோ 3 -பற்றி யாரும் கவனிக்காத 5 சிறப்பம்சங்கள்!
Apple Event 2025: ஐபோன் ஏர், ஏர்பாட்ஸ் ப்ரோ 3 -பற்றி யாரும் கவனிக்காத 5 சிறப்பம்சங்கள்!
ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர ‘அவே டிராப்பிங்’ (Awe Dropping) நிகழ்வில், மிக மெலிதான ஐபோன் ஏர் உள்ளிட்ட புதுமைகளால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த சில சுவாரசியமான அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.1. மெலிந்த ஆனால் வலிமையான ஐபோன் ஏர்!ஆப்பிள் உருவாக்கியதிலேயே மிகவும் மெலிதான இந்த போன், அதன் மெலிந்த மற்றும் எடை குறைந்த வடிவமைப்புக்காக மட்டுமின்றி, அதன் உறுதிக்காகவும் ஈர்க்கிறது. மெலிதான ஃபோன்கள் எளிதில் வளையும் என்ற அச்சத்தை முறியடித்துள்ளது ஆப்பிள்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவெறும் 5.6 மி.மீ. தடிமன் கொண்ட ஐபோன் ஏர், அழுத்தத்திற்குப் பிறகும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மெலிந்த வடிவமைப்பு ஒருபுறம் இருக்க, சக்திவாய்ந்த பிராசசருடன் வருவது இதன் சிறப்பம்சம். இது ஒரு புதிய வகை போனாகவே பார்க்கப்படுகிறது.2. ஏர்பாட்ஸ் ப்ரோ 3: வித்தியாசமான ஒலி அனுபவம்புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 3-ஐ நீங்கள் அணிந்தவுடன் ஒரு வித்தியாசமான உணர்வை உணரலாம். சிலிக்கான் மற்றும் நுரை (foam) கலந்த புதிய மெட்டீரியல், ஒலித் தடுப்புத் திறனை மேம்படுத்தி, இது சத்தத்தை உள்ளே விடாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இசையை இன்னும் தெளிவாகக் கேட்க உதவுகிறது. இதன் மூலம், இரைச்சலைக் குறைக்கும் (noise cancellation) திறன் வியத்தகு அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய ரக டிப்களுக்குப் பழகுவதற்குச் சற்று நேரம் தேவைப்படலாம். ஆனால், மேம்பட்ட ஒலி அனுபவம் உங்களை பிரமிக்க வைக்கும்.ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் அல்ட்ரா 3-ல் உள்ள இரத்த அழுத்த கண்காணிப்பு அம்சம், ஒரு புரட்சிகரமான மாற்றமாகும். இது வெறும் சென்சார்கள் மட்டுமல்ல, ரத்த ஓட்டத்தை அளந்து, நாள்பட்ட உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளைக் கண்டறியும் தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. இந்த அம்சம் பழைய வாட்சுகளில் கிடைக்காது என்பது ஒரு குறைதான். ஆனால், இது உடல்நல கண்காணிப்பில் ஒரு புதிய மைல்கல் என்பதில் சந்தேகமில்லை.4. சூடேறாத ‘ப்ரோ’ மாடல்கள்ஐபோன் 17 ப்ரோ மாடல்கள், நீராவி அறை (vapour chamber) குளிரூட்டும் அமைப்புடன் வருகின்றன. இதனால், நீண்ட நேரம் பயன்படுத்தும்போது ஃபோன் சூடாவது தடுக்கப்படுகிறது. குறிப்பாக, வீடியோ கேம் விளையாடும்போது, சிப்பின் செயல்திறன் குறையாமல் சீராகப் பராமரிக்கப்படுகிறது. இது, வேகமான செயல்திறனை விரும்புபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.5. ஆஃப்லைனில் கூட டிரான்ஸ்லேஷன்புதிய ஏர்பாட்ஸ் ப்ரோவில் உள்ள நேரடி மொழிபெயர்ப்பு அம்சம், இணைய இணைப்பு இல்லாமலும் செயல்படும் திறன் கொண்டது. அதுவும், வெறும் வார்த்தைகளை மட்டும் மொழிபெயர்க்காமல், தகவலின் நோக்கத்தையும் உள்வாங்கி மொழிபெயர்க்கிறது. உங்கள் ஃபோன் பாக்கெட்டில் இருந்தால்கூட, இந்த அம்சம் இயங்குவது, ஆப்பிளின் தொழில்நுட்ப வல்லமைக்கு சான்று.
