வணிகம்
திக்குமுக்காட வைக்கும் தங்கம் விலை! இன்னைக்கு வாங்கலாமா?
திக்குமுக்காட வைக்கும் தங்கம் விலை! இன்னைக்கு வாங்கலாமா?
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து, சாமானியர்களின் கைகளுக்கு எட்டாத உயரத்திற்குச் சென்றிருப்பது பலரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. இதன் விளைவாக, நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டது.கடந்த 6-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை தாண்டி, ஒரு புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னரும் கூட விலை குறையவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) அன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.81,200 என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த விலையேற்றம் பல குடும்பங்களின் திருமண மற்றும் பிற விசேஷத் திட்டங்களுக்கு ஒரு பெரிய தடையாக மாறியுள்ளது.இன்றைய நிலவரம்புதிய உச்சத்தைத் தொட்டாலும், நேற்று மற்றும் இன்று தங்கம் விலை அதே விலையில் தொடர்ந்து வருகிறது. அதாவது, இன்று (செப்டம்பர் 11) சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் ஒரு சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் போலவே வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும் பார் வெள்ளி ரூ.1,40,000-க்கும் விற்பனையாகிறது.இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்?வணிகர்களின் கருத்துப்படி, சர்வதேச அளவில் டாலர் மதிப்பும் தங்கம் விலையும் உயர்ந்திருப்பதால் உள்நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. மேலும், பாதுகாப்பான முதலீடு என்ற எண்ணத்தில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால், ஆபரணத் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே, தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், இந்த விலை நிலவரங்களை கருத்தில் கொண்டு முடிவெடுப்பது நல்லது.
