இந்தியா
புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீர் பிரச்னை; மூவர் மரணமடைந்ததாக சி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீர் பிரச்னை; மூவர் மரணமடைந்ததாக சி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்
குடிநீரில் கழிவுநீர் கலந்த வருவதாக கூறப்படும் பிரச்சனை தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சியை கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது.இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் நகரப் பகுதிகளில் குறிப்பாக உருளையன்பேட்டை கோவிந்த சாலை, நெல்லித்தோப்பு சக்தி நகர், கொசப்பாளையம் பிள்ளை தோட்டம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்தநீரை குடித்ததினால் பாதிக்கப்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி பொதுப்பணித்துறை அலட்சியத்தால் அரசு வழங்கிய குடிநீரை குடித்ததினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.புதுச்சேரியின் பாசிக் நிறுவனம் மூலம் சுத்திரிக்கப்பட்ட குடிநீரை ஒரு காலத்தில் நாடாளுமன்றத்திலும், குடியரசுத்தலைவர் மாளிகையிலும் பயன்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் இன்று மாநில மக்கள் பயன்படுத்தினாலே நீர் சம்பந்தமான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் புதுச்சேரியின் குடிநீர் மாசுபட்டுள்ளது.நிலத்தடி நீரின் ஆதாரங்கள் அரசின் தவறான கொள்கையினால் பெருமளவில் அழிந்து விட்டதன் விளைவாகவும் நீர் ஆதாரங்களில் எல்லாம் நகரமயமாக்கலின் விளைவாக கழிவுநீர் கலந்து விட்டதாலும் குடிநீரில் டி.டி.எஸ் அளவு அதிகபட்சம் 300 வரை இருக்கலாம் என்ற நிலையில் டி.டி.எஸ் 3000 அளவிற்கு அதிகமாக உள்ளது. இந்த நீரினை குடிக்கும் மக்கள் சிறுநீரக நோய் தாக்குதலுக்கு அதிக அளவில் உள்ளாகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் சமீப காலமாக பொதுப்பணி துறையின் மெத்தனப் போக்கினால் பொதுமக்கள் உயிர் இழக்கும் நிலை அதிகரித்துள்ளது. எனவே மாநில மக்களுக்கு தரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட பொதுப்பணி துறையும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உள்ளாட்சித் துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
