தொழில்நுட்பம்
சூரியப் புயலின் துகள் மட்டுமே 6 கோடி டிகிரி செல்சியஸ்… சூரியனின் சூடான ரகசியம் கண்டறிந்த விஞ்ஞானிகள்!
சூரியப் புயலின் துகள் மட்டுமே 6 கோடி டிகிரி செல்சியஸ்… சூரியனின் சூடான ரகசியம் கண்டறிந்த விஞ்ஞானிகள்!
சூரியன்… நம் பூமிக்கு ஒளியையும், வெப்பத்தையும் தரும் ஒரு கோள். ஆனால், அதன் கோபமான வெடிப்புகள் (சூரியப் புயல்கள்) எவ்வளவு சக்தி வாய்ந்தவை தெரியுமா? புதிய ஆய்வு ஒன்று நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளது! சூரிய புயல்கள் வெளியிடும் துகள், இதுவரை நாம் நினைத்ததை விட 6 மடங்கு அதிக வெப்பத்தை அடைகின்றனவாம். அதுவும் சாதாரண வெப்பமல்ல கிட்டத்தட்ட 60 மில்லியன் டிகிரி செல்சியஸ். இந்த வெப்பம் ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது? என்பது விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாக புதிராகவே இருந்தது. செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், புதிய ரகசியத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் ‘தி அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.சூரியப் புயல் குறித்த ஆய்வின் வியத்தகு கண்டுபிடிப்புகள்செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரஸ்ஸல் தலைமையிலான ஆய்வாளர்கள், சூரியப் புயல்களின் போது, மின்சாரம் பாய்ந்த அணுக்கள் (ions) அவற்றைச் சுற்றியுள்ள எலக்ட்ரான்களை விட அதிக வெப்பத்தை அடைகின்றன என்பதைக் கண்டறிந்து உள்ளனர். காந்த மறு இணைப்பு (magnetic reconnection) செயல்முறையின் கணினி உருவகப்படுத்துதல்கள், சோதனைகள் மூலம், எலக்ட்ரான்கள் தோராயமாக 10-15 மில்லியன் °C வெப்பமடையும்போது, அயனிகள் 60 மில்லியன் °C-ஐ கடந்து செல்வதை அவர்கள் கண்டறிந்தனர்.அயனிகளும், எலக்ட்ரான்களும் வெப்பத்தைப் பகிர்ந்து கொள்ள சில நிமிடங்கள் எடுத்துக்கொள்வதால், அதிக வெப்பமுள்ள அயனிகள் நீண்ட நேரம் நீடிக்கின்றன. இதன் காரணமாக, புயலின் ஒளியில் உள்ள தனிமங்களின் நிறமாலை தடயங்கள் பரவி காணப்படுகின்றன. வேகமாக நகரும் அயனிகள் இந்த நிறமாலை கோடுகளை விரிவுபடுத்துகின்றன. இதன் மூலம், அந்தக் கோடுகள் ஏன் எப்போதும் கோட்பாடு கணித்ததை விட விரிவாகத் தெரிகின்றன என்ற புதிர் விடைபெறுகிறது.ஏன் இது முக்கியம்?இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கக்கூடும் என்பதால், அவற்றை நாம் முன்கூட்டியே கணிக்க வேண்டும். ஆனால், இதுவரை நாம் பயன்படுத்திய கணக்கீடுகள் தவறாக இருந்திருக்கலாம். அயனிகளின் வெப்பத்தை தனித்தனியாக கணக்கிட்டால், விண்வெளி வானிலையை இன்னும் துல்லியமாக கணிக்கலாம்.பாதுகாப்பு: விமானப் பயணங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் போன்றவர்களுக்கு சூரியப் புயல்கள் ஆபத்தானவை. இந்த புதிய தகவல்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். மொத்தத்தில், இந்த ஆய்வு சூரியனைப் பற்றிய நமது புரிதலை மாற்றியுள்ளது. சூரியன் நமக்கு ஒளியை மட்டும் தருவதில்லை, சில சமயம் மிகவும் சூடான ஆச்சரியங்களையும் தரும் என்பதை இது நிரூபிக்கிறது.
