Connect with us

இந்தியா

சதித்திட்டத்தால் நடக்கும் போராட்டங்களைத் தடுக்க திட்டம்; 1974 முதல் நடந்த போராட்டங்களை ஆய்வு செய்ய அமித்ஷா உத்தரவு

Published

on

Amit Shah XX1

Loading

சதித்திட்டத்தால் நடக்கும் போராட்டங்களைத் தடுக்க திட்டம்; 1974 முதல் நடந்த போராட்டங்களை ஆய்வு செய்ய அமித்ஷா உத்தரவு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்காலத்தில் “சிலரின் சதித்திட்டத்தால்” நடைபெறும் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில், 1974-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களையும் ஆய்வு செய்ய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு (பி.பி.ஆர் & டி – BPR&D) உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஆங்கிலத்தில் படிக்க:இந்த உத்தரவுகள், ஜூலை கடைசி வாரத்தில் புதுடெல்லியில் நுண்ணறிவுப் பிரிவு பணியகத்தால் (Intelligence Bureau) ஏற்பாடு செய்யப்பட்ட 2 நாள் ‘தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு-2025’-ல் அமித்ஷாவால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகமானது, சுதந்திரத்திற்குப் பிந்தைய, குறிப்பாக 1974-ம் ஆண்டு முதல் நடந்த அனைத்துப் போராட்டங்களையும் ஆய்வு செய்து, அதற்கான நிலையான செயல்முறையை (எஸ்.ஓ.பி) தயாரிக்க வேண்டும் என்று அமித்ஷா கேட்டுக் கொண்டதாக ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.“காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் (பி.பி.ஆர் & டி) ஆனது, இந்தப் போராட்டங்களுக்கான காரணங்கள், வடிவங்கள், விளைவுகள் மற்றும் ‘திரைக்குப் பின்னால் உள்ள சக்திகள்’ ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று அந்த அதிகாரி கூறினார். எதிர்காலத்தில் “சிலரின் சதித்திட்டத்தால்” நடைபெறும் போராட்டங்களைத் தடுக்க இந்த ஆய்வின் அடிப்படையில் ஒரு நிலையான செயல்முறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம், மாநிலக் காவல் துறைகள் மற்றும் அவர்களின் குற்றப் புலனாய்வுத் துறைகளின் (சி.ஐ.டி) பழைய வழக்குகளின் கோப்புகளை ஒருங்கிணைக்க ஒரு குழுவை அமைத்து வருகிறது.அதிகாரிகளின் கருத்துப்படி, அமித்ஷா, இந்தப் போராட்டங்களின் “நிதி அம்சங்களை” ஆய்வு செய்ய அமலாக்க இயக்குநரகம் (இ.டி), இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவு (எஃப்.ஐ.யு – இந்தியா), மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி) போன்ற நிதிப் புலனாய்வு நிறுவனங்களின் உதவியை நாடவும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் அமைப்புகளை உடைக்க, நிதி முறைகேடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், அறியப்படாத பயங்கரவாத வலைப்பின்னல்களை, அவற்றின் தொடர்புகள் மற்றும் வடிவங்களை அடையாளம் காண ஒரு நிலையான செயல்முறையை உருவாக்க வேண்டும் என்றும் இ.டி, எஃப்.ஐ.யு – இந்தியா மற்றும் சி.பி.டி.டி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலால் ஏற்படும் சம்பவங்களுக்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக, பல்வேறு மதக் கூட்டங்களை ஆய்வு செய்து, அத்தகைய கூட்டங்களைக் கண்காணிப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு நிலையான செயல்முறையைத் தயாரிக்க வேண்டும் என்றும் அமித்ஷா, காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.காலிஸ்தான் தீவிரவாதம் மற்றும் பஞ்சாபில் உள்ள பொதுவான குற்றச் செயல்களைக் கையாள, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் (என்.சி.பி) ஆகியவை தனித்தனி வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.“பஞ்சாப் தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க, புலனாய்வு அமைப்புகள் பஞ்சாப் தொடர்பான பிரச்னைகளில் நல்ல பின்னணி அறிவு கொண்ட அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும்” என்று அந்த அதிகாரி கூறினார். மேலும், தங்கள் வலைப்பின்னல்களை சிறையிலிருந்து இயக்கும் குற்றவாளிகளை, நாட்டின் பிற பகுதிகளிலுள்ள சிறைகளுக்கு மாற்றுவது உட்பட, பயங்கரவாத – குற்றவாளிகள் கூட்டணியைக் கலைக்க என்.ஐ.ஏ ஒரு புதுமையான அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன