தொழில்நுட்பம்
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 2025: இந்தியாவில் பார்க்க முடியுமா?
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 2025: இந்தியாவில் பார்க்க முடியுமா?
சூரிய கிரகணம் என்பது வானில் நிகழும் முக்கியமான நிகழ்வாகும். இது ஆண்டுக்கு ஒருசில முறை நடக்கும். இந்த செப்டம்பர் மாதம் வானியல் நிகழ்வுகளுக்கான மாதமாகவே கருதப்படுகிறது. ஏனெனில், மாதத்தின் முதல் வாரத்தில் சந்திர கிரகணமும் (Blood Moon), இப்போது 21ஆம் தேதி சூரிய கிரகணமும் நிகழவிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில், இது தனிப்பட்ட மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்த ஆண்டு பித்ரு பக்ஷ காலம் சந்திர கிரகணத்துடன் தொடங்கி, சூரிய கிரகணத்துடன் முடிவடைகிறது.செப்டம்பர் 2025 சூரிய கிரகண தேதி, நேரம்கடைசி சூரிய கிரகணம் செப்.21 அன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, இது நள்ளிரவு 1:13 மணிக்கு உச்சத்தை அடையும். இந்த கிரகணம் உச்சத்தை அடைந்த பிறகு, விரைவில் முடிவடையும். இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் என்பதால், வானியல் மற்றும் ஜோதிட ரீதியாக இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.செப்டம்பர் 2025 சூரிய கிரகணத்திற்கான காரணம்இந்த நிகழ்வின்போது, சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதால், சூரியனின் ஒரு பகுதியை மறைக்கும். இதனால், சூரியன் பிறை வடிவில் வானில் காட்சியளிக்கும். இது ஒரு சம இரவு-பகல் (equinox) கிரகணம் என்று அழைக்கப்படுவதற்கான காரணம், இது செப்டம்பர் சம இரவு-பகல் நேரத்திற்கு சற்று முன்பு நிகழ்கிறது. அந்த நேரத்தில், சூரியன் பூமியின் நிலநடுக்கோட்டுக்கு மேலே நேராக இருப்பதால், உலகம் முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்கள் சமமாக இருக்கும்.எந்தெந்த நகரங்களில் சூரிய கிரகணம் 2025 தெரியும்?சூரிய கிரகணம் 2025 தெற்கு அரைக்கோளத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தெளிவாகத் தெரியும். குறிப்பாக, கிழக்கு ஆஸ்திரேலியா, தென் பசிபிக் பகுதி மற்றும் நியூசிலாந்து ஆகிய இடங்களில் இது தெரியும். அண்டார்டிகாவில் உள்ள பார்வையாளர்களும் எந்தத் தடையுமின்றி இந்த சூரிய கிரகணத்தைக் காண முடியும். ஆனால், இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது என்பது சற்று ஏமாற்றமளிக்கும் செய்தி. வட அரைக் கோளத்தில் உள்ள எந்த நாடுகளிலும் இந்த சூரிய கிரகணம் தெரியாது. எனவே, இந்தியாவில் எந்த நகரத்தில் இருப்பவர்களும் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
