இந்தியா
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கோரிக்கை: புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கோரிக்கை: புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் போராட்டம்
புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதன்கிழமை காலை முதல் அனைத்து 3 தொழிற்சங்கங்களும் சம்பள உயர்வு பாக்கி தொகை தீபாவளி போனஸ் அளிக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு பேசப்பட்டு அரியர்ஸ் தொகை அளிப்பதாக புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் உள்ள மகாத்மா காந்தி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஒப்புக்கொண்டபிறகு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுநாள் வரையில் அரியர்ஸ் தொகை அளிக்கவில்லை. அடுத்த மாதம் 20-ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி போனஸ் முன்கூட்டியே பேசி முடிக்கப்பட வேண்டும். அது குறித்து 3 தொழிற்சங்கங்களும் நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. 3 தொழிற்சங்கங்களும் பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவி சாய்க்காததால் இன்று (17.09.2025) காலை முதல் தொழிலாளர்கள் அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
