வணிகம்
மாதம் ரூ.5000 முதலீடுக்கு ரூ.2 கோடி ரிட்டன்; இப்படி செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்!
மாதம் ரூ.5000 முதலீடுக்கு ரூ.2 கோடி ரிட்டன்; இப்படி செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்!
மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்குபவரா நீங்கள்? ‘இந்தச் சம்பளத்தில் என்னங்க சேமிப்பது, குடும்பச் செலவுகளுக்கே போதவில்லை’ என்று அலுத்துக்கொள்பவரா? அப்படியானால், இந்தச் செய்தி உங்களுக்குத்தான். சரியான நிதித் திட்டமிடலுடன், மாதம் ரூ.50,000 சம்பளத்திலேயே ரூ.2 கோடி என்ற பெரிய இலக்கை எட்ட முடியும் என்பதுதான் நிபுணர்களின் கருத்து. இது கனவல்ல, நிஜம்! அதற்குப் பின்னால் ஒரு அற்புதமான சூத்திரம் இருக்கிறது.’50-30-10-10′ என்ற மந்திர விதி!பணக்காரர்கள், தங்களின் வருமானத்தை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? அவர்களும் இதேபோன்ற ஒரு எளிய விதியைப் பின்பற்றுகிறார்கள். இதைத்தான் ’50-30-10-10′ விதி என்று சொல்கிறார்கள். உங்கள் ரூ.50,000 சம்பளத்தை இந்த நான்கு பாகங்களாகப் பிரித்து செலவு, சேமிப்பு, முதலீடு எனப் பிரித்துக்கொள்ள வேண்டும்.50% – அத்தியாவசிய செலவுகள் (ரூ.25,000): வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், குழந்தைகளின் கல்வி, போக்குவரத்து, மின்சாரக் கட்டணம் போன்ற தவிர்க்க முடியாத செலவுகளுக்காக இந்தத் தொகையை ஒதுக்குங்கள். இதுவே உங்கள் பட்ஜெட்டின் அஸ்திவாரம்.30% – தனிப்பட்ட விருப்பங்கள் (ரூ.15,000): வாழ்க்கை என்பது வெறும் வேலை, செலவு மட்டும் அல்ல. மகிழ்ச்சியும் முக்கியம். ஆன்லைன் ஷாப்பிங், நண்பர்களுடன் வெளியே செல்வது, சினிமா, உணவகங்களில் சாப்பிடுவது போன்ற உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக இந்தத் தொகையை ஒதுக்குங்கள். இது உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.10% – முதலீடு (ரூ.5,000): இதுதான் உங்கள் கோடீஸ்வர கனவின் சாவி. மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், தங்கம் அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற முதலீட்டு வழிகளில் இந்தத் தொகையை ஒவ்வொரு மாதமும் தவறாமல் முதலீடு செய்யுங்கள்.10% – அவசர நிதி மற்றும் இன்ஷூரன்ஸ் (ரூ.5,000): மருத்துவ அவசரநிலைகள் அல்லது எதிர்பாராத செலவுகளுக்கு இந்தத் தொகை ஒரு பாதுகாப்பு வளையம். இதை சேமித்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.ரூ.2 கோடி எப்படி சாத்தியம்?இப்போது நீங்கள் கேட்கலாம், ‘மாதம் ரூ.5,000 முதலீடு செய்து எப்படி ரூ.2 கோடி சேர்க்க முடியும்?’ இங்குதான் கூட்டு வட்டி (Compound Interest) என்ற அற்புதம் வேலை செய்கிறது.நீங்கள் மாதம் ரூ.5,000 வீதம் முதலீடு செய்து, உங்கள் முதலீட்டிற்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், சுமார் 31 ஆண்டுகளில் உங்கள் பணம் ரூ.2 கோடியாகப் பெருகியிருக்கும்.இன்னும் வேகமாகச் செல்வதற்கு ஒரு வழி இருக்கிறது! ஒவ்வொரு ஆண்டும் உங்கள் முதலீட்டுத் தொகையை 10% அதிகரிப்பது (Step-up SIP). இந்த முறையைப் பின்பற்றினால், அதே 12% வருமானத்தில், உங்கள் ரூ.2 கோடி கனவு வெறும் 25 ஆண்டுகளில் நனவாகும்.ஒரு சிறிய முதலீடு, நீண்ட காலத்திற்குப் பொறுமையாகத் தொடர்ந்தால், அது மிகப்பெரிய செல்வத்தைக் குவிக்கும் என்பதை இது காட்டுகிறது. எனவே, இன்றே தொடங்குங்கள்! உங்கள் சேமிப்புப் பயணத்தை இப்போதிருந்தே தொடங்குங்கள். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்!
