இந்தியா
மின்னல் வேகத்தில் முடிந்தது புதுச்சேரி சட்டமன்றம்! 45 நிமிடத்தில் பரபரப்பு கூட்டம்
மின்னல் வேகத்தில் முடிந்தது புதுச்சேரி சட்டமன்றம்! 45 நிமிடத்தில் பரபரப்பு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடர், காலை 9:35 மணிக்குத் தொடங்கி, வெறும் 45 நிமிடங்களிலேயே நிறைவடைந்தது. இந்த மின்னல் வேக நிகழ்வு, புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.சபாநாயகர் செல்வம் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் இரங்கல் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.இதனைத் தொடர்ந்து, முக்கிய சட்ட முன்வரைவுகள் தாக்கல் செய்யப்பட்டன. வணிகம் செய்தலை எளிதாக்கும் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா ஆகியவை சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன.சமீபத்தில் பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பிற்காக பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.காலை 10:20 மணிக்கு, சபாநாயகர் செல்வம், சபை நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். ஒட்டுமொத்தமாக, 45 நிமிடங்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்தன.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
