இந்தியா
என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: புதுச்சேரி சபாநாயகர் ஆவேசம்
என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: புதுச்சேரி சபாநாயகர் ஆவேசம்
என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகதயார் என்று சபாநாயகர் செல்வம் ஆவேசமாக கூறினார்.புதுவை சட்டசபையில் சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- கவர்னர் ஒப்புதல் புதுச்சேரியில் தொழில்கள் தொடங்க கால வரம்புக்குள் தடையில்லா சான்றிதழ் அரசு துறைகள் வழங்காவிட்டால் அபராதம் விதிக்கும் சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. கவர்னரிடமோ, முதல்- அமைச்சரிடமோ, அமைச்சர்களிடமோ கோப்புகள் தேங்கவில்லை. கவர்னர் உடனடியாக ஒப்புதல் தருகிறார்.அதிகாரிகள் மத்தியில் தான் கோப்புகள் பல மாதங்கள் தேங்குவதால், தலைமை செயலாளர் தான் இந்த சட்டத்தை அமைச்சரவையில் ஒப்புதல் வாங்க கோரியதை தொடர்ந்து தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சட்டம் தான். மாநில அந்தஸ்து விவகாரம் சட்டசபையில் மக்கள் பிரச்சினைகளுக்கு பேச வாய்ப்பு தருவதாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவித்தேன்.முதல்-அமைச்சரும் தயாராக இருந்தார். ஆனால் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் வெளியேற்றினோம். மக்களுக்கு தேவையானதை இந்த அரசு செய்யும். மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி விரைவில் டெல்லி செல்ல இருக்கிறார். அப்போது எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வோம். சட்டசபை தலைவர், யார் அழைத்தாலும் அந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் என சட் டத்தில் தெளிவாக உள்ளது. கூட்டத்தில் சபாநாயகர் பங்கேற்க கூடாது என்று மரபு இருந்தால் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி காட்டட்டும். என் மீதான குற்றச்சாட்டை அவர் நிரூபித் தால் பதவி விலக தயார். இவ்வாறு அவர் கூறினார்.
