வணிகம்
பி.எஃப். கணக்கை இனி உங்க மொபைலிலேயே சுலபமா சரிபார்க்கலாம்: ‘பாஸ்புக் லைட்’ வசதியை அறிமுகப்படுத்தியது ஈ.பி.எஃப்.ஓ
பி.எஃப். கணக்கை இனி உங்க மொபைலிலேயே சுலபமா சரிபார்க்கலாம்: ‘பாஸ்புக் லைட்’ வசதியை அறிமுகப்படுத்தியது ஈ.பி.எஃப்.ஓ
ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு ஒரு புதுமையான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பாஸ்புக் லைட்’ (Passbook Lite) என்ற இந்த புதிய சேவை, உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் (PF) கணக்கு விவரங்களை எளிதாகவும் விரைவாகவும் அணுக உதவுகிறது.இதுவரை, பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கு விவரங்களைப் பார்க்க, ஈ.பி.எஃப்.ஓ-வின் அதிகாரபூர்வ பாஸ்புக் போர்ட்டலுக்குச் சென்று தனிப்பட்ட முறையில் உள்நுழைந்து (login) சரிபார்க்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இந்த புதிய வசதி, இந்த நடைமுறையை மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்த முயற்சியை வரவேற்றுள்ளது. அரசின் நோக்கமான வெளிப்படையான, யூஸர் ஃபிரெண்ட்லி சேவைகளை வழங்குவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளது.’பாஸ்புக் லைட்’ அம்சங்கள்: ஒரே போர்ட்டலில் அத்தனையும்!இந்த புதிய ‘பாஸ்புக் லைட்’ வசதி, ஏற்கனவே உறுப்பினர்கள் பயன்படுத்தும் unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற போர்ட்டலிலேயே இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உறுப்பினர்கள் இனிமேல் தங்கள் பிஎஃப் பங்களிப்புகள், வைப்புத்தொகைகள் (contributions), எடுத்த தொகை (withdrawals) மற்றும் மொத்த இருப்புத்தொகை (balance) போன்ற அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில், எளிமையான முறையில் பார்க்கலாம்.முக்கிய அம்சங்கள்:*ஒரே லாகின் (login) கீழ் அனைத்து முக்கிய சேவைகளையும் பெற முடியும்.*பாஸ்புக் விவரங்கள் கிராபிக்ஸ் டிஸ்பிளே போன்ற வசதிகளுடன் முழுமையாகத் தெரியும்.*இந்த வசதி ஏற்கனவே உள்ள பாஸ்புக் போர்ட்டலின் சுமையைக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது.*’பாஸ்புக் லைட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டாலும், உறுப்பினர்கள் ஏற்கனவே உள்ள பாஸ்புக் போர்ட்டலையும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.’அனெக்சர் கே’ இனி உங்கள் கைகளில்!ஒரு ஊழியர் வேலை மாறும்போது, அவரது பிஎஃப் கணக்கு புதிய நிறுவனத்தின் கீழ் உள்ள பிஎஃப் அலுவலகத்திற்கு மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான ‘பரிமாற்றச் சான்றிதழ்’ (Transfer Certificate) ‘அனெக்சர் கே’ (Annexure K) என்று அழைக்கப்படுகிறது.இதுவரை, இந்த சான்றிதழ் பிஎஃப் அலுவலகங்களுக்குள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டு, உறுப்பினர்களுக்கு அவர்கள் கோரினால் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், இப்போது, இந்த நடைமுறையிலும் ஒரு பெரிய சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி உறுப்பினர்கள் இந்த ‘அனெக்சர் கே’ சான்றிதழை பிடிஎஃப் (PDF) வடிவத்தில் நேரடியாக உறுப்பினர் போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இந்த புதிய வசதியால் கிடைக்கும் நன்மைகள்:*உங்கள் பிஎஃப் பரிமாற்றத்தின் நிலையைக் கண்காணிக்க முடியும்.*புதிய கணக்கில் உங்கள் பிஎஃப் இருப்பு மற்றும் சேவை காலம் சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.*பயன்பாட்டிற்கான நிரந்தர டிஜிட்டல் ஆவணமாக இதனைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இது ஓய்வூதியத் திட்டப் பயன்களுக்கு மிகவும் முக்கியமானது.*ஈ.பி.எஃப்.ஓ சேவைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துகிறது.இந்த புதிய வசதிகள் மூலம், பிஎஃப் உறுப்பினர்களின் பல்வேறு குறைகள் குறையும் என்றும், அவர்கள் மிகுந்த திருப்தி அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே உள்நுழைவின் கீழ் அனைத்து முக்கிய சேவைகளையும் வழங்குவது, உறுப்பினர்களின் வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
