இந்தியா
டெல்லி முதல் துபாய், பாங்காக் வரை: உளவு பார்த்த சி.ஆர்.பி.எஃப் வீரருக்கு பாக்., உளவுத்துறை நிதி கொடுத்தது எப்படி?
டெல்லி முதல் துபாய், பாங்காக் வரை: உளவு பார்த்த சி.ஆர்.பி.எஃப் வீரருக்கு பாக்., உளவுத்துறை நிதி கொடுத்தது எப்படி?
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உதவி ஆய்வாளர் மோதி ராம் ஜாட் பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த மே 27-ல் கைதுசெய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவிற்குள் உளவு நடவடிக்கைகளுக்காக நிதி திரட்ட பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய நிதி வலையமைப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்தனர்.பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புகள் (PIOs) வர்த்தகம், சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை போன்ற முறையான வர்த்தகங்களுக்குள் ஊடுருவி, நிதி ஆதாரங்களை எவ்வாறு மாற்றி உளவு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளன என்பது குறித்து என்.ஐ.ஏ. ஒரு விரிவான குற்றப்பத்திரிகையைத் தயாரிக்கிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கமோதி ராம் ஜாட்டின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, அவருக்கு அக்டோபர் 2023 முதல் ஏப்ரல் 2025 வரை பாகிஸ்தான் உளவாளி “சலீம் அகமது” என்பவரிடமிருந்து ரூ.1.90 லட்சம் பணம் வந்தது தெரியவந்தது. இந்த பணம், மோதி ராம் ஜாட் அவரது மனைவி வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோதமாக வர்த்தகம் சார்ந்த பணச் சலவை, சட்டவிரோத அந்நியச் செலாவணி வர்த்தகம், மற்றும் உள்நாட்டு பணப் பரிவர்த்தனை வலையமைப்புகள் போன்ற முறையான பரிவர்த்தனைகளுக்குள் உள்ள இடைவெளிகள் வழியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் கண்டறிந்தபடி, 3 முக்கிய வழிகள் மூலம் இந்த நிதி மாற்றப்பட்டுள்ளது. வர்த்தகப் பரிவர்த்தனை:பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், நகைகள், விதைகள் மற்றும் காலணிகள் போன்ற பொருட்கள், துபாய் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து நேரடி இறக்குமதிக்கு 200% சுங்க வரி விதிக்கப்பட்டதால், இந்த பொருட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன.துபாயில் உள்ள இடைத்தரகர்கள், டெல்லி மற்றும் பாட்னாவிலுள்ள சிறிய ஆடை நிறுவனங்கள் மூலம் இந்த ஆடைகளை விநியோகித்துள்ளனர். இந்திய கடை உரிமையாளர்கள், இந்த இடைத்தரகர்களின் அறிவுறுத்தலின்பேரில், பாகிஸ்தான் உளவாளிகளுக்குச் சேர வேண்டிய சிறிய தொகைகளை (ரூ.3,500 முதல் ரூ.12,000 வரை) யூ.பி.ஐ. மூலம் நேரடியாக அனுப்பி வைத்துள்ளனர். இந்த தொகைகள், உளவாளிகளுக்கு ரகசிய தகவல்களை அளிப்பதற்கான ஊதியமாக வழங்கப்பட்டுள்ளன. கடை உரிமையாளர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே முறையான வியாபார பரிவர்த்தனை என நம்பியுள்ளனர்.அந்நியச் செலாவணி பரிவர்த்தனை:பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புகள், தாய்லாந்தில் உள்ள சில இந்திய வம்சாவளி தனிநபர்களுடன் தொடர்பு வைத்துள்ளன. தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நியச் செலாவணிக்கு கவர்ச்சியான விலைகளை வழங்கி, தாய்லாந்து பணத்தை (பாத்) ரொக்கமாக பெற்றுக்கொண்டனர்.பின்னர், அந்த நபர்கள் தங்களது இந்திய வங்கிக் கணக்குகள் அல்லது இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் அந்த சுற்றுலாப் பயணிகளின் இந்திய வங்கிக் கணக்கிற்கு நிகரான தொகையை மாற்றி, உளவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பை அளித்துள்ளனர்.உள்நாட்டு பணப் பரிவர்த்தனை:டெல்லி மற்றும் மும்பையில் உள்ள உள்ளூர் மொபைல் கடை உரிமையாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் சேவைகளை வழங்குகின்றனர். இந்த கடைகளில், பணம் அனுப்புபவரின் அடையாளத்தை ஓ.டி.பி. மூலம் உறுதி செய்ய வேண்டும். ஆனால், இந்த கடைகாரர்கள் பணம் அனுப்புபவரிடமிருந்து ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கள் சொந்தக் கணக்குகள் மூலம் பெறுபவருக்கு பணத்தை அனுப்புகின்றனர். இம்முறையில், பணம் அனுப்புபவரின் அடையாளத்தை பதிவு செய்ய எந்த வழியும் இல்லை. இந்த சட்டவிரோத வழியைப் பயன்படுத்தி, உளவாளிகள் தங்களது அடையாளங்களை மறைத்துக்கொண்டு மோதி ராம் ஜாட்டின் கணக்கிற்குப் பணத்தை அனுப்பியுள்ளனர்.விசாரணை தொடக்கம்:மே மாதத்தில், என்.ஐ.ஏ. குழுக்கள் நாடு முழுவதும் 8 மாநிலங்களில் 15 இடங்களில் சோதனை நடத்தி, மோதி ராம் ஜாட்டின் கணக்கிற்கு பணம் அனுப்பிய பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளன. இந்த விசாரணைகள் மூலம், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய இந்த நிதி வலையமைப்புகள் முற்றிலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
