வணிகம்
அணுசக்தியில் இயங்கும் டேட்டா சென்டர்கள்: இந்தியாவின் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சல்
அணுசக்தியில் இயங்கும் டேட்டா சென்டர்கள்: இந்தியாவின் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சல்
இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் டேட்டா சென்டர்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிப்பதற்காக அணுசக்தியைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியால், டேட்டா சென்டர்கள் பெரிய அளவில் விரிவடைந்து வருவதால், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகிறது.டேட்டா சென்டர்களுக்கான தேசிய கொள்கையை உருவாக்கும் முயற்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களிடம், நீண்ட காலத்திற்கு நம்பகமான மற்றும் கார்பன் உமிழ்வு இல்லாத மின்சாரத்திற்காக, சிறிய மட்டுப்படுத்தப்பட்ட அணு உலைகள் (SMRs) பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளது. இந்த தகவலை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.அதிவேக மின்சாரத் தேவைடேட்டா சென்டர்களின் மின்சாரத் தேவை மிகப் பெரியது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டுக்குள் டேட்டா சென்டர்களின் மின்சாரப் பயன்பாடு இரு மடங்காகலாம். இதனால், 2030-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு அல்லது கார்பன் எதிர்மறை நிலையை அடைவது, நிறுவனங்களுக்குச் சாத்தியமில்லாமல் போகலாம். இதன் காரணமாகவே, AI துறையில் அதிக முதலீடு செய்துள்ள கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள், தங்களின் டேட்டா சென்டர்களுக்குத் தேவையான மின்சாரத்தை அணுமின் நிலையங்களிடமிருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன.முக்கிய செலவினம்டேட்டா சென்டர்களின் செயல்பாட்டு மற்றும் முதலீட்டுச் செலவுகளில் மின்சாரப் பயன்பாடும், அதற்கான கட்டமைப்புகளுமே பிரதான இடம் பெறுகின்றன. CareEdge Ratings-ன் அறிக்கையின்படி, டேட்டா சென்டர்களின் மொத்த முதலீட்டுச் செலவில் 40% மின்சார அமைப்புகளுக்கும், செயல்பாட்டுச் செலவில் 65% மின்சார பயன்பாட்டுக்கும் செலவிடப்படுகிறது. இந்தியாவில், 1 மெகாவாட் டேட்டா சென்டர் வசதியை அமைக்க ₹60-70 கோடி வரை செலவாகிறது.அனாராக் நிறுவனத்தின் அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவின் டேட்டா சென்டர் சந்தை சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புடையது. 2024 நிதியாண்டில் மட்டும் சுமார் 1.2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. JLL ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கணிப்பின்படி, 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மேலும் 795 மெகாவாட் புதிய டேட்டா சென்டர் திறனைச் சேர்க்கும், மொத்த திறன் 1.8 ஜிகாவாட்டாக உயரும்.புதுப்பிக்க முடியாத ஆற்றலின் சவால்கள்டேட்டா சென்டர்களுக்கு முதலில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் (சூரியன், காற்று) விருப்பமாக இருந்தாலும், அதிலும் சில சவால்கள் உள்ளன. சூரியன் இல்லாத போது அல்லது காற்று வீசாத போது மின்சாரம் கிடைக்காது. மேலும், அந்த மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகளும் இல்லை. இந்தச் சூழலில், அணுசக்தி ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. ஏனெனில், இது இரவும் பகலும் தங்கு தடையற்ற மின்சாரத்தை அளித்து, புதுப்பிக்கக்கூடிய ஆற்றலின் வரம்புகளை நிறைவு செய்கிறது.சிறிய மட்டுப்படுத்தப்பட்ட அணு உலைகள் (SMRs)SMRs என்பவை 30 MWe முதல் 300 MWe திறன் கொண்ட சிறிய அணு உலைகள். AI மற்றும் டேட்டா சென்டர்களுக்கான மின்சாரத் தேவை அதிகரித்து வருவதால், அணுசக்தியைச் சந்தைப் போட்டிக்குரியதாக மாற்ற இந்த SMRகள் முக்கியமானவை.உலக அளவில் இரண்டு SMR திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஒன்று, ரஷ்யாவில் உள்ள Akademik Lomonosov மிதக்கும் அணு உலை. மற்றொன்று, சீனாவில் உள்ள HTR-PM அணு உலை.இந்தியாவின் தொலைநோக்கு திட்டம்இந்தியா, தூய எரிசக்தி மாற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவும், சிறிய அணு உலைகளை தொழில்நுட்பம் சார்ந்த வெளியுறவுக் கொள்கையாகவும் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.அணுசக்தி விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சிவில் பொறுப்புச் சட்டம், 2010 (Civil Liability for Nuclear Damage Act, 2010): இந்தச் சட்டம் அணுசக்தி விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குகிறது. ஆனால், அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் மற்றும் பிரான்சின் ஃபிராமடோம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தச் சட்டத்தால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.அணுமின் நிலைய செயல்பாடுகளில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது: இது தொடர்பான சட்டத் திருத்தங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் அணுசக்தி திட்டங்களில் சிறுபான்மை பங்குகளைப் பெறுவதற்கு வழிவகுக்கலாம்.அணுசக்தி துறை இதுவரை இந்தியாவில் மிகக் கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இந்த சட்டத் திருத்தங்கள், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் கையெழுத்திடப்பட்ட இந்தோ-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் வர்த்தக ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
