தொழில்நுட்பம்
ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி சாம்சங் போன்: அமேசான், பிளிப்கார்ட் சேலில் ஆஃபர் மழை!
ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி சாம்சங் போன்: அமேசான், பிளிப்கார்ட் சேலில் ஆஃபர் மழை!
அமேசானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ மற்றும் பிளிப்கார்ட்டின் ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை சூடுபிடித்துள்ளது. 2 முன்னணி இ-காமர்ஸ் தளங்களும் மின்னணுப் பொருட்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளன. ஏற்கனவே ஆரம்பகட்ட விற்பனை தொடங்கிய நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் பேவரைட் பொருட்களைப் பட்டியலில் நிரப்பத் தொடங்கிவிட்டனர். புதிய சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க நீங்க திட்டமிட்டிருந்தால், இந்த விற்பனையில் கிடைக்கும் அசத்தலான சலுகைகளைப் பற்றி பார்க்கலாம்.ரூ.10,000-க்குள் சிறந்த சாம்சங் போன்கள்:சாம்சங் கேலக்ஸி M06: இதன் அசல் விலை ரூ.12,499. ஆனால், அமேசானில் வெறும் ரூ.7,499 மற்றும் பிளிப்கார்ட்டில் ரூ. 8,463-க்கு வாங்கலாம்.சாம்சங் கேலக்ஸி M16: ரூ.15,999 என விற்கப்பட்ட இந்த ஸ்மார்போனை அமேசானில் ரூ.10,499-க்கு வாங்கலாம்.சாம்சங் கேலக்ஸி M05: 50MP டூயல் கேமரா, 5000mAh பேட்டரியுடன் வரும் இந்த போனின் அசல் விலை ரூ.9,999. விற்பனையில் இதை ரூ.6,249-க்கு வாங்க முடியும்.சாம்சங் கேலக்ஸி F07: பிளிப்கார்ட்டில் ரூ.9,999 என விற்கப்பட்ட இந்த மாடலின் 64GB வேரியண்ட்ட் வெறும் ரூ.8,499 என்ற விலையில் பெறலாம்.ரூ. 20,000-க்குள் வாங்க வேண்டிய போன்கள்:சாம்சங் கேலக்ஸி M36: 128GB வேரியண்ட் அசல் விலை ரூ.22,999. அமேசான், பிளிப்கார்ட் இரண்டிலும் இதை ரூ.15,000 என்ற சலுகை விலையில் பெறலாம்.சாம்சங் கேலக்ஸி M35: கேலக்ஸி M36-ன் முந்தைய மாடலான இது, கண்ணைக் கவரும் அம்சங்களுடன் வருகிறது. அமேசானில் இதை ரூ.15,499-க்கு வாங்க முடியும்.சாம்சங் கேலக்ஸி F17: Full HD+ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரியுடன், சிறந்த செயல்திறனை வழங்கும் இந்த போன் பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.15,999-க்கு கிடைக்கிறது.சாம்சங் கேலக்ஸி F36: Exynos 1380 பிராசஸர், 50MP கேமரா, மற்றும் நீண்ட நேர பேட்டரி ஆயுளுடன் வரும் இந்த போன் பிளிப்கார்ட்டில் ரூ. 15,499-க்கு கிடைக்கிறது.ரூ. 30,000-க்குள் வாங்கலாம்!சாம்சங் கேலக்ஸி M56: ரூ.30,999 என விற்கப்பட்ட இந்த லேட்டஸ்ட் M சீரிஸ் போனை, பிளிப்கார்ட்டில் சுமார் ரூ.7,000 தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ. 23,869-க்கு பெறலாம்.சாம்சங் கேலக்ஸி A55: ஆல்-ரவுண்டர் போனாகக் கருதப்படும் இதன் அசல் விலை ரூ.42,999. அமேசானில் இப்போது ரூ.23,999-க்கு வாங்கலாம்.சாம்சங் கேலக்ஸி A36: சக்திவாய்ந்த செயல்திறன், ஏ.ஐ. அம்சங்களுடன் வரும் இந்த லேட்டஸ்ட் A சீரிஸ் போன் ரூ.35,999-லிருந்து அமேசானில் ரூ. 28,499 என்ற விலைக்குக் கிடைக்கிறது.ரூ. 40,000-க்குள் ஃபிளாக்ஷிப் அனுபவம்சாம்சங் கேலக்ஸி S24: Snapdragon 8 Gen 3 பிராசஸருடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஃபிளாக்ஷிப் மாடல், பிளிப்கார்ட்டில் ரூ. 40,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் அம்சங்களை அனுபவிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு.சாம்சங் கேலக்ஸி A56: ரூ. 48,999 என விற்கப்பட்ட இந்த AI-சக்தி கொண்ட போன் அமேசானில் ரூ. 35,999 என்ற விலையில் கிடைக்கிறது.
