தொழில்நுட்பம்
பி.எஸ்-5 ரசிகர்களுக்கு பம்பர் ஆஃபர்… ரூ.5,000 டிஸ்கவுண்ட்; சோனியின் பண்டிகை கால ட்ரீட்!
பி.எஸ்-5 ரசிகர்களுக்கு பம்பர் ஆஃபர்… ரூ.5,000 டிஸ்கவுண்ட்; சோனியின் பண்டிகை கால ட்ரீட்!
சோனி நிறுவனத்தின் 5-வது ஜெனரேசன் கேமிங் கன்சோலான பிளேஸ்டேஷன் 5 (PS5), உலகெங்கிலும் உள்ள கேமிங் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, நவம்பர் 2020-ல் வெளியானது. அதன் வெளியீட்டில் இருந்து, பி.எஸ்-5 அதன் பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ், மின்னல் வேக செயல்பாடு மற்றும் புதிய கேமிங் அனுபவத்தால், கேமிங் துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.முக்கிய சிறப்பம்சங்கள்அதிவேக எஸ்.எஸ்.டி (Ultra-High-Speed SSD): பி.எஸ்5-ன் மிகப்பெரிய பலம் அதன் கஸ்டம் எஸ்.எஸ்.டி. இது கேம்களை மிக விரைவாக லோட் செய்ய உதவுகிறது. இதனால், கேமர்கள் காத்திருக்கும் நேரம் கணிசமாகக் குறைக்கப்படுகிறது.டூயல்சென்ஸ் கண்ட்ரோலர் (DualSense Controller): இது புரட்சிகரமான கண்டுபிடிப்பு. இந்த கண்ட்ரோலரில் உள்ள ஹாப்டிக் ஃபீட்பேக் (Haptic Feedback) அடாப்டிவ் ட்ரிகர்ஸ் (Adaptive Triggers) அம்சங்கள், விளையாட்டின் ஒவ்வொரு உணர்வையும் கைகளில் உணர உதவுகிறது. ஒரு வில்லில் அம்பை இழுக்கும்போது, அதன் இறுக்கத்தை நீங்கள் ட்ரிகர் பட்டனில் உணரலாம்.4K கிராபிக்ஸ், ரே ட்ரேசிங்: பி.எஸ்5, 4K ரெசல்யூஷனில் (resolution) கேம்களை இயக்கக்கூடியது. மேலும், ரே ட்ரேசிங் (Ray Tracing) தொழில்நுட்பம், நிஜ உலகத்தைப்போல ஒளி மற்றும் நிழல்களைத் துல்லியமாகக் காட்டுகிறது.3டி ஆடியோடெக் (3D AudioTech): இந்த தொழில்நுட்பம், கேமிற்குள் நீங்கள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். எந்த திசையில் இருந்து சத்தம் வருகிறது என்பதை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.பி.எஸ்5-க்கு என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பல அற்புதமான கேம்கள் உள்ளன. Demon’s Souls, Spider-Man: Miles Morales, Ratchet & Clank: Rift Apart, God of War Ragnarök போன்ற டைட்டில்கள், பி.எஸ்5-ன் முழு திறனையும் வெளிப்படுத்துகின்றன. பி.எஸ்4 கேம்களையும் இதில் விளையாட முடியும் என்பது கூடுதல் சிறப்பு.பி.எஸ்-5க்கு ரூ.5,000 தள்ளுபடி – சோனியின் பண்டிகை கால பரிசுஇந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, சோனி (Sony) நிறுவனம் அதன் பிரபல கேமிங் கன்சோலான பிளேஸ்டேஷன் 5 (PS5) மீது அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. டிஜிட்டல் மற்றும் பிஸிக்கல் என 2 மாடல்களுக்கும் ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சிறப்பு விற்பனை செப்.22 முதல் அக்.19 வரை அல்லது ஸ்டாக் இருக்கும் வரை நீடிக்கும்.ஆஃபர் காலம்: செப்.22 முதல் அக்.19 வரை.எங்கு வாங்கலாம்? அமேசான், ஃபிளிப்கார்ட், பிளிங்கிட், ஸெப்டோ போன்ற ஆன்லைன் தளங்கள் மற்றும் க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், சோனி சென்டர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலும் இந்த சலுகையைப் பெறலாம்.பி.எஸ்-5 டிஜிட்டல் எடிஷன்: இதன் அசல் விலை ரூ.49,990. இப்போது தள்ளுபடிக்குப் பிறகு ரூ.44,990-க்கு விற்கப்படுகிறது.பி.எஸ்-5 பிஸிக்கல் எடிஷன்: இதன் அசல் விலை ரூ.54,990. இப்போது தள்ளுபடிக்குப் பிறகு ரூ.49,990-க்கு விற்கப்படுகிறது.பண்டிகை காலம் என்பதால், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சோனி இந்த தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை மூலம் கேமிங் ஆர்வலர்கள் குறைந்த விலையில் PS5 கன்சோலை வாங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
