வணிகம்
மாதச் சம்பளம் மாதிரி கிடைக்கும் ரூ 9250; போஸ்ட் ஆபீஸில் இப்படி முதலீடு செய்து பாருங்க!
மாதச் சம்பளம் மாதிரி கிடைக்கும் ரூ 9250; போஸ்ட் ஆபீஸில் இப்படி முதலீடு செய்து பாருங்க!
இந்தியாவில் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தபால் அலுவலகம்தான். ஏனெனில், இங்குள்ள திட்டங்கள் அதிக வட்டியுடன் பாதுகாப்பான முதலீட்டுக்கான உத்தரவாதத்தையும் வழங்குகின்றன. பல சேமிப்பு திட்டங்களில், மாதாந்திர வருமான திட்டம் (MIS) தனித்துவமானது. இதில் ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் போதும், அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிற்கு நிலையான வட்டி வருமானம் வந்துகொண்டே இருக்கும்.மாதம் ₹9,250 வருமானம் பெறுவது எப்படி?தற்போது, தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (MIS) ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் உங்கள் மனைவி அல்லது குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து, ஒரு கூட்டு கணக்கில் ₹15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ₹9,250 நிலையான வட்டி வருமானத்தைப் பெறலாம். இதுவே தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ₹9 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ₹5,550 கிடைக்கும்.இந்தத் திட்டம் ஓய்வு பெற்றவர்களுக்கும், நிலையான மாத வருமானத்தை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்.திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:முதலீட்டு வரம்பு: தனிநபர் கணக்கிற்கு அதிகபட்சம் ₹9 லட்சம், கூட்டு கணக்கிற்கு ₹15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.குறைந்தபட்ச முதலீடு: ₹1,000 அல்லது அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.கால அளவு: இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். முதிர்வு காலத்திற்குப் பிறகு முதலீடு செய்த முழு தொகையும் உங்களுக்குத் திரும்ப அளிக்கப்படும்.முன் கூட்டியே கணக்கை மூடுதல்: கணக்கைத் திறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, அபராதம் செலுத்தி கணக்கை மூடலாம்.வட்டி பெறுதல்: ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் வட்டியை, தபால் அலுவலக சேமிப்பு கணக்கிலோ அல்லது உங்கள் வங்கி கணக்கிற்கோ நேரடியாக மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.எப்படி கணக்கு தொடங்குவது?இந்த கணக்கைத் தொடங்க, அருகில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணக்கு தொடங்குவதற்கு முன்னர், உங்களுக்கு தபால் அலுவலகத்தில் ஒரு சேமிப்பு கணக்கு இருப்பது அவசியம்.அஞ்சல் அலுவலகத்தின் இந்த மாதாந்திர வருமான திட்டம், உங்கள் முதலீட்டைப் பாதுகாப்பதோடு, ஒவ்வொரு மாதமும் உறுதியான வருமானத்தையும் அளிக்கிறது. இது நிச்சயமற்ற நிதிச் சூழலில் மிகவும் நம்பகமான தேர்வாக அமைகிறது.இதேபோல நீங்கள் தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தில் ₹1,00,000 முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ₹633 நிலையான வட்டியாகப் பெறுவீர்கள். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் ***************ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய அஞ்சல் துறை ‘அஞ்சலக ஆண்டு காப்பீட்டு பாலிசித் திட்டம்’ என்ற புதிய, புரட்சிகரமான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு வெறும் ₹565 மட்டுமே முதலீடு செய்து, ₹10 லட்சம் வரை காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற முடியும் என்பது இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். அதிக பிரீமியம் மற்றும் சிக்கலான நடைமுறைகள் காரணமாக இதுவரை காப்பீடு பெற முடியாமல் இருந்த பலருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது..இதுதொடர்பாக மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்!₹565 முதலீட்டில் ₹10 லட்சம் பாதுகாப்பு! ஏழைகளுக்கான அஞ்சலகத்தின் அசத்தலான காப்பீட்டுத் திட்டம்
