தொழில்நுட்பம்
7500mAh பேட்டரி, ஸ்டைலிஷ் டிசைன்… பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸுடன் மிரட்ட வருகிறது ஓப்போ!
7500mAh பேட்டரி, ஸ்டைலிஷ் டிசைன்… பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸுடன் மிரட்ட வருகிறது ஓப்போ!
ஒப்போவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ், அக்.16 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட டிசைன், புதிய கேமரா அமைப்பு, அதிக திறன் கொண்ட பேட்டரி போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த சீரிஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சீன சமூக ஊடக தளமான Weibo-வில் இந்த ஃபோனின் அதிகாரபூர்வப் படங்களைப் பகிரப்பட்டுள்ளது. இதில், இந்த ஃபோன் சதுர வடிவ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஹசல்ப்ளாட் (Hasselblad) லோகோ இருப்பதால், கேமராவுக்காக ஒப்போ நிறுவனம் ஹசல்ப்ளாட் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்த ஃபோனின் வடிவமைப்பு ஒன்பிளஸ் 13எஸ் மாடலை ஒத்திருப்பதாகவும், பின்பக்கம் தட்டையாகவும், பக்கவாட்டில் மெட்டல் ஃபிரேம்கள் மற்றும் பவர், வால்யூம் பட்டன்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 மாடல், வெல்வெட் டைட்டானியம், ஃப்ராஸ்ட் ஒயிட், மற்றும் மிஸ்ட் பிளாக் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும். ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல் வெல்வெட் டைட்டானியம் மற்றும் ஃப்ராஸ்ட் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் மட்டும் வெளியாகும்.சிறப்பம்சங்கள்:ஸ்கிரீன்: இந்த புதிய சீரிஸ், “first-ever 1-nit All-Scenes 1 nit Bright Eye Protection Screen” என்ற தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது மெல்லிய பெசல்கள் மற்றும் வளைந்த விளிம்புகளைக் கொண்டதாகவும் இருக்கும். இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு, மீடியாடெக் டைமென்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) பிராசஸர் சக்தி அளிக்கும்.பேட்டரி: பேட்டரி திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்9 மாடல் 7025mAh பேட்டரியுடனும், ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ மாடல் 7500mAh பேட்டரியுடனும் வெளிவரும். ஒப்போ நிறுவனம் இந்த ஃபோன்கள் உலக அளவில் வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, சீனாவில் வெளியீட்டிற்குப் பிறகுதான் இந்த ஃபோன் இந்திய சந்தையில் எப்போது வரும் என்பது தெரியவரும்.
