இலங்கை
கிளிநொச்சியில் பொலிசாரை கண்டு ஓடிய குடும்பஸ்தர் கிணற்றில் விழுந்து பலி!
கிளிநொச்சியில் பொலிசாரை கண்டு ஓடிய குடும்பஸ்தர் கிணற்றில் விழுந்து பலி!
இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட ஆலடி பகுதியில் நேற்று (24.09.2025) மாலை பரிதாபகரமான விபத்து ஒன்று இடம்பெற்றது.
சட்டவிரோத கசிசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவின் 6ம் யூனிட் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
அச்சமயம், பொலிசாரை கண்டு ஓடிய குடும்பஸ்தர் ஒருவர் அருகிலிருந்த வீட்டின் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தற்போது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
