இலங்கை
பலவந்தம் பிரயோகித்தால் விளைவு பாரதூரமாகும்; அரசாங்கத்தை எச்சரிக்கும் நாமல்!
பலவந்தம் பிரயோகித்தால் விளைவு பாரதூரமாகும்; அரசாங்கத்தை எச்சரிக்கும் நாமல்!
தொழிற்சங்கத்தினரைப் பலவந்தமாக அடக்க முயற்சித்தால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக மாறும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். 1889, 1988 ஆம் ஆண்டுகளில் செயற்பட்டதைப் போன்று தற்போது செயற்படமுடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஜனாதிபதியின் ஒருவருட ஆட்சியில் நாட்டின் விவசாயம், கடற்றொழில் ஆகிய துறைகளின் வளர்ச்சி பின்னடைந்துள்ளது. அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்து மக்களுக்கு உணவளிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. இலங்கை மின்சாரசபை ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுகிறார்கள். கடந்த அரசாங்கம் இயற்றிய மின்சாரசபைச் சட்டம் இரத்துச்செய்யப்படும் என்று மின்சார சேவையாளர்களுக்கு வாக்குறுதியளித்தீர்கள். அழகான நாடு செழிப்பான வாழ்க்கை என்று குறிப்பிட்டுக் கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த ஒருவருட காலத்தில் மக்கள் செழிப்பாகவில்லை-என்றார்.
