சினிமா
ராகவா லோரன்ஸ் ரூட்டுக்கு மாறிய பாலா.. பப்ளிசிட்டி ருசி கண்டுட்டாரு.? பிஸ்மி பகிர்
ராகவா லோரன்ஸ் ரூட்டுக்கு மாறிய பாலா.. பப்ளிசிட்டி ருசி கண்டுட்டாரு.? பிஸ்மி பகிர்
சின்னத்திரையில் தனது காமெடி மூலம் பிரபலமான KPY பாலா, பல்வேறு உதவிகளை மக்களுக்காக செய்தார். ஆனால் தற்போது அதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகின்றது என்ற சர்ச்சை வெடித்துள்ளது. பாலா சமீபத்தில் காந்தி கண்ணாடி படத்தில் நடித்தார். இந்த படம் மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சும்மா ஐந்து கோடியை கடந்து வெற்றி பெற்றது. அதன் பின்பு பாலா தொடர்பான நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவியத் தொடங்கின.தனக்கு கிடைக்கும் வருமானத்தில் பல நற்செயல்களை செய்து வருகின்றார் பாலா. ஆனால் இவருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது? இவரை சர்வதேச கைக் கூலிகள் இயக்குகின்றனவா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பத்திரிக்கையாளர் பிஸ்மி அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், பாலா இன்று இந்த அளவுக்கு உயர்ந்திருக்கின்றார் என்றால் அவருடைய உழைப்பு தான் முக்கிய காரணம். ஆனால் தற்போது அவருக்கு எதிராக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. எனக்கு என்னவோ யாரோ திட்டமிட்டு இதனை செய்கின்றார்கள் என்று தோன்றுகின்றது. இது ஸ்க்ரீன் பிளேயாக இருக்கக்கூடும் .பாலா வாங்கி கொடுத்த ஆம்புலன்ஸ் வண்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு விளக்கம் கொடுத்த பாலா, அதில் டி என்ற ஒரு இலக்கம் மட்டும் மாறியதாக குறிப்பிட்டார். ஆனாலும் அவர் உரிய ஆதாரத்தை காட்டவில்லை. அதே நேரத்தில் ராகவா லோரன்ஸ் நடிக்கும் படங்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கின்றது. அவரும் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார். எனினும் அவர் பப்ளிசிட்டிக்கு ருசி கண்டுவிட்டார். அவருடைய படங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கின்றது. கிட்டத்தட்ட பாலாவும் அந்த ரூட்டுக்கு தான் வருகின்றார் என்று கூறியுள்ளார் பிஸ்மி.
