Connect with us

பொழுதுபோக்கு

ரூ 320 கோடி வசூலித்த இதிகாச கதையம்ச கார்ட்டூன் படம்; இப்போது ஓ.டி.டி-யில்: மிஸ் பண்ணாதீங்க மக்களே!

Published

on

Tamil Catroon Movi8e

Loading

ரூ 320 கோடி வசூலித்த இதிகாச கதையம்ச கார்ட்டூன் படம்; இப்போது ஓ.டி.டி-யில்: மிஸ் பண்ணாதீங்க மக்களே!

உலக அரங்கில் ஒடிடி தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திரையரங்குகளில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கும் ரசிகர்கள், அதேபோல் ஒடிடி தளங்களில் என்னென்ன படங்கள் வெளியாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளத்தில் 320 கோடி வசூலித்த ஒரு இதிகாச கார்ட்டூன் திரைப்படம் வெளியாகியுள்ளது. அது என்ன படம் என்று பார்ப்போமா?இந்த வாரம் ஒடிடி தளத்தில், அனுஷ்கா நடிப்பில் க்ரிஷ் ஜகராளமுடி இயக்கத்தில் வெளிவந்த ‘காட்டி’, கடந்த மாதம் 1 -ம் தேதி திரைக்கு வந்த சுமதி வளவு, படம் ஜீ5 தளத்தில் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. மலையாளத்தில்  மோகன்லாலின் ‘ஹிருதயபூர்வம்’  படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதேபோல், பகத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ஓடும் குதிர சாடும் குதிர, படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.அந்த வரிசையில், மகா அவதார் நரசிம்மா படமும் வெளியாக உள்ளது. கன்னடத்தில்,கே.ஜி.எஃப்., காந்தாரா போன்ற பிரமாண்ட படங்களை ஹோம்பலே தயாரிப்பில் வெளியான இந்த படம்,  அரக்கன் இரண்யகசிபு மகன் பக்தன் பிரகலாதன் மற்றும் விஷ்ணு அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவின் கதையை தழுவி கார்ட்டூன் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. அஸ்வின் குமார் இயக்கத்தில், வெளியான இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படம், 40 பட்ஜெட்டில் தயாராகி ரூ.320 கோடி வசூல் குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வெளியான கார்ட்டூன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை பிடித்துள்ளது. தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி உள்ளது. தமிழிலும் இந்த படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படம், கடந்த ஜூலை 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன