Connect with us

தொழில்நுட்பம்

லைட் முதல் வாஷிங் மெஷின், ஏ.சி. வரை… எல்லாம் ஆட்டோமெட்டிக்; சாம்சங் ஏ.ஐ. ஹோம் செய்யும் மேஜிக்!

Published

on

Samsung AI Home

Loading

லைட் முதல் வாஷிங் மெஷின், ஏ.சி. வரை… எல்லாம் ஆட்டோமெட்டிக்; சாம்சங் ஏ.ஐ. ஹோம் செய்யும் மேஜிக்!

உங்க வீடு சிந்தித்து செயல்பட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? அந்த மாயாஜாலத்தைத்தான் சாம்சங் நிறுவனம் இப்போது நிஜமாக்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு முன் லைட்டுகளை அணைக்க மறப்பது, தூக்கத்துக்கு நடுவே ஏ.சி டெம்பரேச்சரை மாற்ற எழுவது. இந்த சிரமங்களுக்கு சாம்சங் இப்போது நிரந்தரமாக விடை கொடுத்துள்ளது. மும்பையில் உள்ள சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்டோரில் ‘ஏ.ஐ. ஹோம்’ என்ற அதிரடி தொழில்நுட்பத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் கனெக்‌ஷன் அல்ல; இது உங்க வீட்டுச் சாதனங்கள், உபகரணங்கள் மற்றும் சேவைகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஒரு ஸ்மார்ட் மற்றும் பயன்படுத்த எளிதான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும் முழுமையான ஒருங்கிணைப்பு.’ஏ.ஐ. ஹோம்’ என்பது பயனர்களுக்கு ஆட்டோமெட்டிக் அமைப்பாக செயல்படும். இதன்மூலம் நீங்கள் கையை அசைக்க வேண்டியதில்லை. நீங்க வீட்டிற்குள் நுழையும்போது, விளக்குகள் தானாகவே எரியும். உங்க தூக்கத்தின் தரத்தை உணர்ந்து, ஏர் கண்டிஷனர் தனது வெப்பநிலையைத் தானே மாற்றிக்கொள்ளும். துணி துவைக்கும் இயந்திரம், உங்க துணிகளின் தன்மைக்கேற்ற சரியான வாஷ் சைக்கிளை பரிந்துரைக்கும். இந்த புதிய அமைப்பு “ஆம்பியன்ட் இன்டெலிஜென்ஸ்” (ambient intelligence) என்ற கொள்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இது உங்க பழக்க வழக்கங்கள், சுற்றுப்புறச் சூழலில் இருந்து தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டு, உங்களுக்கு அதிக வசதி, மின்சார சேமிப்பை வழங்குகிறது.சாம்சங் ஏ.ஐ. ஹோம் என்பது தனித்தனி ஏ.ஐ. அம்சங்களின் தொகுப்பு அல்ல; இது அனைத்து சாதனங்களிலும் ஒத்திசைவுடன் செயல்படும்.கேலக்சி ஏ.ஐ: ஸ்மார்ட்போனில் வேலைகளைச் செய்யவும், ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் உதவும்.விஷன் ஏ.ஐ: டிவிகளில் இயல்பான மொழி ஆணைகளை ஏற்கவும், பிடித்த உள்ளடக்கத்தைப் பரிந்துரைக்கவும் உதவும்.பெஸ்போக் ஏ.ஐ: வீட்டு வேலைகளை எளிதாக்கும் வகையில், உபகரணங்கள் (Appliances) செயல்படும்.ஸ்மார்ட் திங்க்ஸ் ஆப்: சாம்சங் மற்றும் பிற நிறுவனங்களின் சாதனங்கள் அனைத்தையும் ஒரே இன்டர்பேஸில் இணைக்கிறது.இந்த ‘ஏ.ஐ. ஹோம்’ மூலம், இணைக்கப்பட்ட நுண்ணறிவை (Connected Intelligence) அன்றாட வாழ்க்கையின் மையத்திற்குக் கொண்டு வருவதே சாம்சங்கின் நோக்கம். இனி உங்கள் வாழ்க்கை, அறிவார்ந்த வசதி மற்றும் பாதுகாப்பின் புதிய தளத்திற்குச் செல்கிறது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன