இலங்கை
வர்த்தக நிலையங்களுக்கு ஞாயிறுகளில் கட்டாயமான விடுமுறை; பருத்தித்துறையில் முன்மாதிரி!
வர்த்தக நிலையங்களுக்கு ஞாயிறுகளில் கட்டாயமான விடுமுறை; பருத்தித்துறையில் முன்மாதிரி!
பருத்தித்துறை நகர்ப்பகுதியில் இயங்கி வரும் அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும். கட்டாய அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட வேண்டும் என்று பருத்தித்துறை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
பருத்தித்துறை நகர்ப் பகுதியில் இயங்கிவரும் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுடன் தொடர்புடைய உணவகங்கள். மருந்தகங்கள், சைக்கிள் திருத்தகங்கள் தவிர்ந்த ஏனைய சகல வர்த்தக நிலையங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பருத்தித்துறை வர்த்தக சங்கம் அண்மைய நாள்களாக நடவடிக்கை எடுத்திருந்தது.
இது தொடர்பில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுடன் குழுவாகவும், தனித்தனியாகவும் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை வர்த்தக சங்கம் நடத்தியிருந்தது. இதன்தொடர்ச்சியாகவே, பிரதி ஞாயிறுகளில் கட்டாய அடிப்படையில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்காலங்களில் மட்டும் விதிவிலக்கு பேணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
