தொழில்நுட்பம்
600GB டேட்டா, 1 வருட வேலிடிட்டி.. ரீசார்ஜ் கவலை இனி இல்ல; பி.எஸ்.என்.எல். லின் அதிரடி பிளான்!
600GB டேட்டா, 1 வருட வேலிடிட்டி.. ரீசார்ஜ் கவலை இனி இல்ல; பி.எஸ்.என்.எல். லின் அதிரடி பிளான்!
மாதம் மாதம் ரீசார்ஜ் செய்யும் தொந்தரவா? ஒரு வருஷத்துக்கு ஒரேயொரு ரீசார்ஜ்தான். பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.1999-க்கு அருமையான பிளானை வழங்குகிறது. இது 1 வருடம் முழுவதும் (365 நாட்கள்) தடையில்லா சேவையை வழங்கும் பட்ஜெட்-பிரண்ட்லி பிளான். அடிக்கடி ரீசார்ஜ் செய்யத் தேவையில்லாத, செலவு குறைந்த தீர்வைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு இது சூப்பர் சாய்ஸ்.ரூ.1999 பிளானில் என்னென்ன கிடைக்கும்?வேலிடிட்டி: 365 நாட்கள் (அன்லிமிடெட் சேவை)மொத்த டேட்டா: 600GB ஹை-ஸ்பீடு டேட்டா. (முடிந்ததும் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறையும்)அழைப்புகள் (Calls): இந்தியா முழுவதும் உள்ளூர், வெளியூர் (STD), ரோமிங் அழைப்புகள் அனைத்தும் அன்லிமிடெட்.எஸ்.எம்.எஸ்: ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்இந்தத் திட்டத்தின் செலவு ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 மட்டுமே. மாதாமாதம் செய்யும் பல சிறிய ரீசார்ஜ்களை ஒப்பிடும்போது, மிகக் குறைந்த செலவாகும். வருடம் முழுவதும் ஒரே ரீசார்ஜ் என்பதால், அடிக்கடி பணம் செலுத்த வேண்டிய அல்லது வேலிடிட்டி முடிந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. 600GB என்ற பெரிய அளவிலான மொத்த டேட்டா ஒதுக்கீடு இருப்பதால், அதிகம் ஸ்ட்ரீமிங் செய்பவர்கள், வீடியோ பார்ப்பவர்கள் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.பி.எஸ்.என்.எல்-லின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று உங்கள் ப்ரீபெய்ட் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யலாம். Bajaj Finserv போன்ற 3-ம் தரப்பு தளங்களில், ‘பில்கள் மற்றும் ரீசார்ஜ்கள்’ பிரிவுக்குச் சென்று, மொபைல் ப்ரீபெய்ட்டைத் தேர்ந்தெடுத்து, உங்கள் எண்ணை உள்ளிட்டு ரூ.1999 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். கூடுதலாக, இந்தத் திட்டம் தினமும் 100 எஸ்.எம்.எஸ். அனுப்ப உங்களை அனுமதிக்கிறது. அக்.15-ம் தேதிக்கு முன் இந்த ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் வாங்கினால், பி.எஸ்.என்.எல். வலைத்தளம் மற்றும் ஆப் மூலம் 2% வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் இந்தத் திட்டத்தை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
