இலங்கை
இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினசரி 3 உயிரிழப்புகள்
இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினசரி 3 உயிரிழப்புகள்
இலங்கையில் தினசரி சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் நோயாளிகளும், அதனுடன் தொடர்புடைய மூன்று இறப்புகளும் பதிவாகின்றன எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டில் 19 ஆயிரத்து 457பெண்களுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில், 5 ஆயிரம் 477 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். இது, பெண்களுக்கான அனைத்து புற்றுநோய் நிகழ்வுகளிலும் 28 வீதமாகும்.
மார்பகப்புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தமுடியும் என்றாலும், கிட்டத்தட்ட 30 வீத வழக்குகள் மேம்பட்ட நிலைகளில் கண்டறியப்படுவதால்,குணமடைவது மிகவும் கடினமாகிறது.
அதிகாரபூர்வத் தரவுகளின் படி, இலங்கையில் ஆண்டுக்கு 15 ஆயிரத்து 245 புற்றுநோய் தொடர்பான இறப்புகள் ஏற்படுகின்றன. இதில், 798 இறப்புகள் மார்பகப் புற்றுநோயால் ஏற்படுகின்றன. 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை மருத்துவ மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
