சினிமா
எனக்கு டாக்டர் பட்டம் வேணாம்… மக்கள் சிரிச்சா போதும்.! ரசிகர்களை நெகிழ வைத்த ராமரின் உரை
எனக்கு டாக்டர் பட்டம் வேணாம்… மக்கள் சிரிச்சா போதும்.! ரசிகர்களை நெகிழ வைத்த ராமரின் உரை
பிரபல காமெடியன் ராமர், சமீபத்தில் நடைபெற்ற விஜய் அவார்ட்ஸ் 2025 விழாவில் “Favourite காமெடியன்” விருதைப் பெற்றபோது நிகழ்ந்த நெகிழ்ச்சி மிகுந்த உரை, ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகத்தையும் கவர்ந்துள்ளது. கோடான கோடி ரசிகர்களை தமது இயல்பான நகைச்சுவையால் நெகிழவைத்த ராமர், அந்த மேடையில் பேசிய சில நிமிடங்கள் அனைவரது மனதையும் தொட்டது.விருதை பெற்றுக்கொண்ட பிறகு, தனது உணர்வுகளை பகிர்ந்த ராமர், பேச ஆரம்பித்த வேளையிலேயே ஒரு நிமிட அமைதி நிலவியது. பின் அவர் தமது வார்த்தைகளால் அந்த மேடையை முழுவதுமாக தன்வசமாக்கினார்.”மக்கள் நம்மள பார்த்த உடனே சிரிக்கிறாங்க. நிறைய பேர் என்னிடம் சொல்வாங்க… ‘என் அப்பா heart patient சார், ஆனா நீங்க காமெடி செய்யறதை பார்த்து சிரிக்கிறாரு!’ அடுத்தவங்கள சிரிக்க வைக்கிற கொடுப்பனையை கடவுள் நமக்கு கொடுத்து இருக்கிறாரு அது போதுங்க. எனக்கு டாக்டர் பட்டம் எல்லாம் வேணாம்…” என்று கூறியிருந்தார் ராமர். தன்னுடைய காமெடி வேலையை ஒரு பணியாய் பார்த்த ராமர், ரசிகர்களிடம் கடமைப்பட்டிருப்பதை உணர்த்தி இருந்தார். இந்த உரை முழுக்க அவர் தன்னை ஒரு சாதாரண மனிதனாக காட்டிக்கொண்டு, தனது பணி மக்களை சிரிக்க வைப்பதற்கு மட்டுமே என்பதைக் கூறினார். சினிமா உலகத்தில் இது போன்ற தருணங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.
