Connect with us

பொழுதுபோக்கு

கில்லி முதல் பல்டி வரை… தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் படங்களின் பரிணாமம்!

Published

on

balti

Loading

கில்லி முதல் பல்டி வரை… தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் படங்களின் பரிணாமம்!

இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் , ஷாந்தனு நடித்துள்ள திரைப்படம் ‘பல்டி’. இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். மேலும், செல்வராகவன் , அல்ஃபோன்ஸ் புத்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ள இப்படம் கபடியை மையப்படுத்திய ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. ‘பல்டி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கேரளா – தமிழ்நாட்டு எல்லையில் உள்ள உள்ளூர் கும்பல்கள் சண்டையில் சிக்கிய இளம் கபடி வீரர்களின் கதையை இப்படம் பேசுகிறது.’பல்டி’ திரைப்படத்திற்கு முன்பாக தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து வெளியான சில திரைப்படங்களின் பட்டியலை காண்போம். முதலில் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் குறித்து பார்ப்போம்.இப்படம் கபடி கதையை மையமாக வைத்து எடுத்தாலும் விஜய்க்கும் – திரிஷாவிற்கும் இடையிலான காதலையே அதிகம் பேசியுள்ளது. வில்லன் பிரகாஷ் ராஜிடம் இருந்து திரிஷாவை விஜய் எப்படி மீட்கிறார் என்பதே இப்படத்தின் கதைக்களமாகும்.இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’  திரைப்படமும் கபடி விளையாட்டை மையமாக வைத்தே எடுப்பட்டதாகும். கபடி வீரர்களின் சூழ்நிலைகள் மற்றும் வரம்புகளை தாண்டி அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த படத்தில் கால்பந்தை விட விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக காட்டப்பட்டதாக கூறப்பட்டது.இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்ப்பட்டா பரம்பரை’ திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இரு பரம்பரைகளுக்கு இடையே நடக்கும் மோதல்களை இப்படம் எடுத்துரைக்கிறது.மேலும், குரலற்றவர்களின் கனவுகளை நனவாக்கத் துணிந்த ஒரு சாதாரண மனிதன் மூலம் அவற்றை எவ்வாறு ஜனநாயகப்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.  மேலும் சமீபத்தில் விளையாட்டை மையப்படுத்தி வெளியான படங்களில் இது தனித்து நிற்கிறது.இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கெத்து தினேஷ், ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாணுக்கு இடையிலான ஈகோ மோதலை வெளிக்காட்டுகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன