இலங்கை
பொதிசெய்யப்பட்ட பாணில் மனித தோல் ; தீவிரமாகும் விசாரணைகள்
பொதிசெய்யப்பட்ட பாணில் மனித தோல் ; தீவிரமாகும் விசாரணைகள்
ஹட்டன் நகரில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் பொதிசெய்யப்பட்ட பாணில் இருந்து மனித தோல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாண் கொள்வனவாளரால் ஹட்டன் சுகாதார அதிகாரிக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாணில் கை விரலில் ஏற்பட்ட காயத்தின் தோல் துண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வெதுப்பக உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
