இலங்கை
போதைப்பொருள் தகவலளிக்க தொலைபேசி எண்கள் அறிமுகம்!
போதைப்பொருள் தகவலளிக்க தொலைபேசி எண்கள் அறிமுகம்!
போதைப்பொருள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி எண்களைப் பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெராய்ன், ஐஸ், கொக்கைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.யின் அலைபேசி எண்ணை நேரடியாக அழைப்பதன் மூலம் வழங்கலாம். வழங்கப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் அதேவேளையில் தேவையான சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது உட்பட மேலும் சட்டநடவடிக்கைகளை உடன் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
