இலங்கை
யானை தாக்கி ஒருவர் சாவு!
யானை தாக்கி ஒருவர் சாவு!
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு, சீல்லிக்கொடிப் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூலாக்காடு, கிரான் பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த நபர் மீன்பிடிப்பதற்காகச்சென்று இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடிச்சென்போதே யானைத் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
