இலங்கை
வாகன இறக்குமதி வருவாய் இரட்டிப்பு!
வாகன இறக்குமதி வருவாய் இரட்டிப்பு!
வாகன இறக்குமதியால் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் 2025ஆம் ஆண்டுக்கான இலக்கைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான வாகன இறக்குமதியிலிருந்து எதிர்பார்க்கப்படும் வருவாய் இலக்கு 460 பில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய போக்குகள் இந்த வருவாய் சுமார் ரூ. 700 பில்லியனை எட்டக்கூடும் என்றும் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைக்கான கூடுதல் தலைமை இயக்குநர் மல்ஷனி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
