Connect with us

பொழுதுபோக்கு

9 மாதத்தில் 205 படம் ரிலீஸ்… வெற்றி பெற்றது இத்தனை மட்டும் தான்: பிரபல தயாரிப்பாளர் தகவல்

Published

on

cinema

Loading

9 மாதத்தில் 205 படம் ரிலீஸ்… வெற்றி பெற்றது இத்தனை மட்டும் தான்: பிரபல தயாரிப்பாளர் தகவல்

சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்றர்போல் சினிமா துறை மாறிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சினிமாத் துறையில் புது புது இயக்குநர்கள், புதுமுகங்கள் என பலரை நம்மால் காண முடியும்.சினிமாவில் நுழையும் ஒவ்வொரு இயக்குநர்களும், நடிகர்களும் மிகப்பெரிய கனவுடன் தான் அந்த துறையில் நுழைகின்றனர். ஆனால், சிலர் தன் கனவுகளை எட்ட முடிகிறது. சிலரால் அதனை சாதிக்க முடியவில்லை. வெள்ளித் திரையை நம்பி தன் வேலைகளை எல்லாம் விட்டு வந்தவர்கள் பலர் உண்டு.இப்படி ஒவ்வொரு ஆண்டும் புது இயக்குநர்கள், பிரபல இயக்குநர்கள் என பலரும் படங்களை இயக்குகின்றனர், வெளியிடுகின்றனர். இதில், ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியடைகிறதே தவிர மற்றவை எல்லாம் பெரும் தோல்வியை சந்திக்கிறது.சில சமயங்களில் பிரபல இயக்குநர்களின் படங்கள் கூட படுதோல்வியை சந்தித்த நாட்களும் உண்டும். அப்படி எதையும் நிச்சயமாக எண்ண முடியாத ஒரு துறையாக சினிமா இருக்கிறது. சில நேரங்களில் நல்ல கதைகள் ரசிகர்களால் அங்கீகரிப்படுகிறது.சில நேரங்களில் நிராகரிக்கப்படுகிறது. சினிமாவை கனவாக கொண்டு கோடம்பாக்கம் வந்த பல இயக்குநர்கள் ஒரே படத்தில் காணாமல் போன நாட்களும் இருக்கின்றன. இப்படி சினிமா துறையில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன.ஒரு வருடத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகின்றன. ஆனால், அதில் வெற்றி பெற்றவை என்று பார்த்தால் 100-த்திற்கு 20 ஆக தான் இருக்கும். இந்நிலையில், வெள்ளித்திரையில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் ரிலீஸாகின்றன. அதில், எத்தனை வெற்றி பெறுகின்றன என்பது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஒரு பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், “2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 205 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், செப்டம்பரில் மட்டும் 25 புதிய படங்கள் ரிலீஸாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 179 படங்கள் ரிலீஸாகியுள்ளது.Tamil Cinema: Jan to Sept 2025 update. Number of films released: 205 (a record 25 new films released in September)Number of films last year Jan – Sept: 179 Tamil cinema is churning out record number of films each year. Number of films estimated to have succeeded for all…தமிழ் சினிமா ஒவ்வொரு ஆண்டு சாதனை எண்ணிக்கையிலான திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதில், 205 படங்களில் வெறும் 20 படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது. அதாவது 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறது.உண்மை புரியாமல் திரைத்துறை ஒரு தங்கச் சுரங்கம் என்றும் படம் எடுப்பது எளிது என்றும் நம்பி வரும் ஒவ்வொரு வரும் இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன