Connect with us

சினிமா

இயக்குநர் அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை… யார் தெரியுமா.?

Published

on

Loading

இயக்குநர் அவதாரம் எடுக்கும் பிரபல நடிகை… யார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தனித்துவமான தேர்வுகளால், வித்தியாசமான பாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். எப்போதும் சாதாரணமாக பார்க்கப்படும் கதாநாயகி வரம்புகளை தாண்டி, ஆளுமை மிக்க, சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் முன்னிலை வகித்தவரான அவர், இப்போது தனது திறமையை புதிய தளத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அது வேறு எதுவுமில்லை இயக்குநர் அவதாரம் தான். வரலட்சுமி, தனது சகோதரி பூஜா உடன் இணைந்து, புதிய தயாரிப்பு நிறுவனமான “தோசா டைரீஸ்”-ஐ  தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமான “சரஸ்வதி” மூலம், வரலட்சுமி இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.வரலட்சுமியும், பூஜாவும் இணைந்து தொடங்கியுள்ள ‘தோசா டைரீஸ்’ என்பது வெறும் ஒரு தயாரிப்பு நிறுவனம் அல்ல; அது ஒரு கலைப் பயணத்தின் தொடக்கம். இந்த நிறுவனம், புதிய கதைகள், பெண்கள் மையப்படுத்தப்பட்ட விஷயங்கள், மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட படைப்புகளை உருவாக்குவதே குறிக்கோளாகக் கொண்டுள்ளதெனக் கூறப்பட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன