பொழுதுபோக்கு
உங்களிடம் சான்ஸ் கேக்கல, ஆனா அந்த கேரக்டர் நான் தான் நடிப்பேன்; கமல்ஹாசனிடம் பேசிய ரகுவரன் மனைவி!
உங்களிடம் சான்ஸ் கேக்கல, ஆனா அந்த கேரக்டர் நான் தான் நடிப்பேன்; கமல்ஹாசனிடம் பேசிய ரகுவரன் மனைவி!
தமிழ் சினிமாவில் நடிகை, பாடல் ஆசிரியர், இயக்குநர், டப்பிங் கலைஞர், பாடகி என பன்முக திறமையுடன் வலம் வருபவர் நடிகை ரோகிணி. மறைந்த நடிகர் ரகுவரனின் முன்னாள் மனைவியான இவர், சீரியல் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.அதிலும் குறிப்பாக இவரின் சமீபத்திய படங்கள், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார், அந்த வரிசையில் வெளியான ஒரு படம் தான் ’காதல் என்பது பொதுவுடைமை’.நடிகை ரோகிணி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது சமூகம் சார்த்த கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரோகிணி, கமல்ஹாசனிடம் தான் பேசியது குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.அவர் பேசியதாவது, “பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கமல்ஹாசன் எடுக்கப்போவதாக கூறினார். நான் அந்த புத்தகத்தை முழுவதும் படித்து முடித்துவிட்டேன். எனக்கு பூங்குழலி கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். நான் நேராக கமல்ஹாசனை போய் சந்தித்தேன்.நான் கமல்ஹாசனிடம் வாய்ப்பு எல்லாம் கேட்கவில்லை. சார் நீங்க ‘பொன்னியின் செல்வன்’ படம் எடுத்தீர்கள் என்றால் நான் தான் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்றேன். அதன்பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து என்னை அழைத்து ‘மகளிர் மட்டும்’ படத்தின் கதை சொன்னார்கள்.எனக்கும் கதை பிடித்திருந்தது. அதன்பிறகு கமல் சொன்னார் நீங்க இந்த படத்தில் ஸ்ரீதேவி இல்லை என்றார். நான் ரோகிணியாகவே இருக்க விரும்புகிறேன் என்றேன். எங்கிருந்து அந்த தைரியம் எனக்கு வந்தது என்று தெரியவில்லை. எனது அப்பாவிற்கு நான் ஸ்ரீதேவி மாதிரி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது.ஆனால், நான் நானாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த தெளிவு மலையாள படத்தில் நான் நடித்ததன் மூலம் தான் எனக்கு கிடைத்தது. மலையாள சினிமாவில் நீ கதாநாயகியாக நடிக்கிறாயா? தங்கையாக நடிக்கிறாயா? என்பது எல்லாம் இல்லை. நீ என்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதனால் ஒரு தாக்கம் ஏற்பட வேண்டும். அதற்கு நான் பழகிவிட்டேன். அதுதான் கமல்ஹாசன் அவ்வாறு சொல்லும் பொழுது எனக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால், தமிழில் அப்படி இல்லை கதாநாயகி என்றால் கதாநாயகியாக தான் நடிக்க வேண்டும் என்றிருந்தது” என்றார்.
