பொழுதுபோக்கு
கல்யாணம் ஆன முதல் நாள், இவரது அப்பா கொடுத்த அட்வைஸ்: உண்மையை உடைத்த செந்தில் மனைவி
கல்யாணம் ஆன முதல் நாள், இவரது அப்பா கொடுத்த அட்வைஸ்: உண்மையை உடைத்த செந்தில் மனைவி
தமிழ் சினிமாவில் காமெடியில் முத்திரை பதித்த நடிகர் செந்தில் திருமணமான புதிதில், தனது மனைவியிடம், நான் அதிகம் வீட்டில் இருக்க மாட்டேன். வெளியில் சென்றால் தான் நமக்கு சரியாக இருக்கும் என்று கூறியதாக அவரது மனைவியே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளர்.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளியான ஒரு கோயில் இரு தீபம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, பசி, இளமைக்காலம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவருக்கு, பாக்யராஜ் பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளார். அவர் இயக்கிய மௌன கீதங்கள், இன்றுபோய் நாளை வா, பொய் சாட்சி உள்ளிட்ட பல படங்களில் செந்திலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.அதன்பிறகு பல படங்களில் நடித்திருந்த இவர், தியாகராஜன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற, மலையூர் மம்பட்டியான் என்ற படத்தில், க்ளைமேக்ஸில் வில்லத்தனம் செய்யும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து காமெடியில் கலக்கிய செந்தில், அவருடன் பல வெற்றிப்படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் இன்றும் காமெடி கூட்டணியை எடுத்துக்கொண்டால் அதில் செந்தில் கவுண்டமணி ஜோடிக்கு முக்கிய இடம் உண்டு.இவர்கள் நடிப்பில் வெளியான கரகாட்டாக்காரன் உள்ளிட்ட பல படங்கள் காமெடிக்காகவே பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. அதேபோல் பாக்யராஜூவுடன் நெருங்கிய நட்புடன் இருந்த செந்தில், அவர் கெஸ்ட் ரோலில் நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் கூட, அவரை தனது உதவியாளராக நடிக்க வைத்திருப்பார், அதேபோல் தூரல் நின்னுப்போச்சு படத்தில் நம்பியாரின் உதவியாளராக நடிக்க வைத்தது செந்திலுக்கே ஒருவித மகிழ்ச்சியை கொடுத்தது என்று பாக்யராஜூவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.1984-ம் ஆண்டு செந்தில் கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்தபோது கணவர் செந்தில் என்ன சொன்னார் என்பது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள அவரது மனைவி, எங்கள் திருமணம் முடிந்தவுடன், நான் அதிகம் வீட்டில் இருக்க மாட்டேன்., போய்கிட்டே இருப்பேன் போனாதான் சம்பாதிக்க முடியும். இவருக்கு சேமித்து வைப்பது என்று எதுவும் தெரியாது. ஆனால் இவரோட அப்பா நல்லா சேமிப்பு செய்வார். அவருக்கு எல்லாம் தெரியும். எனக்கு திருமணம் ஆனாவுடன் அவர் தான் எனக்கு அதிக அட்வைஸ் கொடுத்தார்.அவனுக்கு ஒன்னுமே தெரியாதுமா, பணம் சேர்த்து வைக்க தெரியாது. சென்னையில் வாடகை கொடுத்து சமாளிக்க முடியாது. அதனால் நீங்கள் முதலில் உங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்குகள் என்று சொன்னார். நாங்கள் வரும்போது, இங்கு வாடகை ரூ300 இருந்தது என்று கூறியுள்ளார்.
