Connect with us

இலங்கை

கேபள் வண்டி உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்த பிக்குமாரின் உடல்கள் நல்லடக்கம்

Published

on

Loading

கேபள் வண்டி உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்த பிக்குமாரின் உடல்கள் நல்லடக்கம்

குருணாகல் – மெல்சிரிபுர பகுதியில் கேபள் வண்டியொன்று உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்த பௌத்த பிக்குமாரின் உடல்கள் இன்று (27) பிற்பகல் மெல்சிரிபுராவில் உள்ள பன்சியகம பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

இலங்கையைச் சேர்ந்த நான்கு பிக்குமாரினதும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவரினதும் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டன.

Advertisement

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த பிக்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான மகா சங்க உறுப்பினர்கள், பக்தர்கள், பிக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த 24 ஆம் திகதி மெல்சிரிபுர நா உயனவில் உள்ள ஆரண்ய சேனாசனத்தில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கேபள் வண்டியொன்று உடைந்து விழுந்ததில் ஏழு பௌத்த பிக்குமார் உயிரிழந்தனர்.

Advertisement

இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன