பொழுதுபோக்கு
மகன் திடீர் மரணம், சுயநினைவு இழந்த பாரதிராஜா; மனோஜ் குடும்பம் பற்றி சகோதரர் உருக்கம்!
மகன் திடீர் மரணம், சுயநினைவு இழந்த பாரதிராஜா; மனோஜ் குடும்பம் பற்றி சகோதரர் உருக்கம்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். தந்தையைப்போல இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்ட மனோஜ், கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘தாஜ் மஹால்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கினார். இதைத்தொடர்ந்து, ’கடல் பூக்கள்’, ’வருஷமெல்லாம் வசந்தம்’, ’அல்லி அர்ஜுனா’, ’ஈரநிலம்’, ’சமுத்திரம்’, ’அன்னக்கொடி’, ‘விருமன்’ என பல படங்களில் நடித்தார். கடைசியாக ‘மார்கழி திங்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.இந்நிலையில், மனோஜ் பாரதிராஜா இறந்து பல மாதங்களாகியும் பாரதிராஜா குடும்பத்தினர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை என பாரதிராஜா சகோதர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “மனோஜ் பாரதிராஜாவின் இழப்பு மிகப்பெரிய இழப்பு.இதிலிருந்து பாரதிராஜா இன்னும் மீளவில்லை. இதை மறப்பதற்காக பாரதிராஜா மலேசியாவிற்கு சென்றார். அங்கு சென்றும் கூட பாரதிராஜா, மனோஜ் நியாபகத்தில் தான் இருந்தார். எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் இன்னும் பாரதிராஜா, மனோஜ் இறப்பில் இருந்து மீண்டு வரவில்லை. இப்போதும் மகனின் நினைவுகளோடு கண்ணீர் வடித்து கொண்டுதான் இருக்கிறார். ஏற்கனவே பாரதிராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் மனோஜ் காலமானார். அந்த வருதத்தில் இருந்து அந்த குடும்பம் இன்னும் மீண்டு வரவில்லை. என்னை பொருத்தவரை மனோஜ் பாரதிராஜா என்னுடன் இருப்பது போல் தான் இருக்கிறது. ஐந்து வருடம் என் தோளில் போட்டு வளர்த்தேன். அவன் என்னை விட்டு பிரியவில்லை என்னுடன் தான் இருக்கிறான். பாரதிராஜாவின் அன்றாட தேவைகளை அவரது மகன்கள் பார்த்துக் கொள்கிறார்கள். பாரதிராஜாவை சந்திக்க யாரையும் அனுமதிப்பதில்லை. ஏனென்றால் மறந்து இருப்பதை கூட நியாபகப்படுத்தி விடுவார்களோ என்ற எண்ணத்தில் அனுமதிப்பதில்லை. பாரதிராஜாவிற்கு மூன்று வருடத்திற்கு முன்பு இருந்தே உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். பாராதிராஜாவிற்கு நினைவுகள் குன்றி வருகிறது. அவருக்கு இன்றும் படம் எடுக்கும் ஆசை இருக்கிறது. சமீபத்தில் என்னிடம் கூறினார் அடுத்து ஒரு படம் எடுப்பேன் அதில் உன்னை நடிக்க வைக்கிறேன் என்று. நான் தவறு செய்துவிட்டேன் ஒரு 15 வருடத்திற்கு முன்பு உன்னை நடிக்க வைத்திருந்தால் நீயும் ஒரு பெரிய ஆளாக மாறியிருப்பாய் என்று சொன்னார்” என்றார்.
